திங்கள், 27 ஏப்ரல், 2026

"போன்சாய்" மரமா?

 



என் பையன் கேட்கிறான்

அடம் பிடிக்கிறான் என்று

ஆகாயவிமானம் 

வாங்கிக்கொடுத்தேன் விளையாட.

அப்புறம்

ட்ரோன் கேட்டான்.

பிறகு அந்த வானைத்தையே

பட்டா போட்டு

வாங்கித்தாருங்கள்

வான வில்லுடன் விளையாட‌

என்றான்.

இப்போ சொல்கிறான்.

ஓட்டுகள் கொத்து கொத்தாக‌

நம் வீட்டு ஓட்டுகள் எல்லாமும்

அவருக்கே தான் போடவேண்டுமாம்.

அட்வான்ஸாக‌

"செயின்ட் ஜார்ஜ் கோட்டை"மாடலும்

வேண்டுமாம்.

அவர் தான் இனி நம் எல்லோருக்குமான‌

முதலமைச்சாராக 

இருக்க வேண்டுமாம்...

இல்லாவிட்டால்

இல்லாவிட்டால்

கர்ஜிக்கிறான்..

கொந்தளிக்கிறான்..

ஐ ஐ டி யில் ரேங்க் வாங்குவதில்

ஒன்றும் குறைச்சல் இல்லை.

ஆனாலும் 

செயற்கை நுண்ணறிவை

விஜய்ணாவின் பெப்சி கோக் ப்ராண்ட்

ஆக்கி குடித்தே தீருவது

என்று அடத்துக்கு மேல் அடம் பிடித்து

ரோடு எல்லாம் அவன்

குத்தாட்டம் தான்.

இப்படி பிள்ளைகள் விளையாட ஆரம்பித்தால்

நாம் "ஏ ஐயை" வைத்து

இன்னொரு பூமியின்

"ஸ்டெப்னி"யை ௭ப்படி

தயார் செய்வது?

இந்த பசங்கள் என்றால்

பொண்ணுகளும் தான்.

கல்யாணமாலையாவது

கத்தரிக்காய் மாலையாவது

எல்லாம் அவரே தான்.

இனி ஓவ்வொரு வீடும்

ஜென்ஸிக்களின்

"போன்சாய்" மரமா?

_______________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக