வண்ணதாசன் அவர்களின் முகநூல் பதிவு 15.04.26
________________________________________________________
வண்ணதாசன் அவர்களே
"கருவாச்சிக் காவியமும் ஓவியமும்"
மிக மிக நன்று.
அதோடு அந்த
பராபவ . . .
"ருக்குமணி பர பர.."
என்ற பாட்டை போல் இருக்கிறது.
நமது பல்லு
இப்படி முறுக்கு சீடை
கடிக்கப் புறப்பட்டது போல் தான்
"தமிழ் வர்ஷ"பஞ்சாங்கத்தை
எடுத்துக்கொண்டு கிளம்புகிறது.
இதில்
அந்த வேப்பம்பூ ரசம் பச்சடி
சாப்பாட்டுக்கு ஒன்றும்
குறைச்சல் இல்லை.
"தமிழன் என்றொரு இனமுண்டு"
அவன் போல் வேறு இனம்
பார்த்ததில்லை.
அதோ இறக்கையெல்லாம்
பிய்த்து விட்டார்கள்.
சற்று நேரத்தில்
"கோழிப்பிரியாணி ரெடி"
என்கிறான்.
அது கோழி அல்ல..
தமிழை அகவி அகவி
அகநானூறுகள் பாடிய
தமிழ் மயிலடா மயில்!
____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக