ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

இப்படியும் ஒரு நெருப்பு.

 

இப்படியும் ஒரு நெருப்பு.

_____________________________________



(ஸ்டோரியில் விஜயராஜ் அவர்களின் கவிதை

"அது வெறும் பெயரல்ல")


காதலை தொலைத்த பிறகும்

வேறு ஒரு பாதையில் 

பயணித்துக்கொண்டிருந்த பிறகும்

ஒரு கடையின் "பெயர்ப்பலகையில்"

அவள் பெயர்!


இது தான் அவர் தீக்குச்சி

கிழித்துப்போட்டது.

கார்ட்டூனில் அவன்

கண்ணில் கண்ணீர்.

பக் கென்று ஆகிவிட்டது.

இதயக்கூடு எனும் சிலிண்டருக்குள்ளேயே

ஆயிரம் ஊழித்தீ!

மனிதனை

சிதைகள் அடுக்காமல்

கொள்ளிச்சட்டிக் கங்குகள்

சதைகளை உடனே தின்று தீர்த்துவிடும்

அவசரப் பசியையும் காட்டாமல்

இந்த பிரபஞ்சங்களையெல்லாம்

சொக்கப்பனைக் கொளுத்த‌ வந்த‌

தேன் தீ...

காதல்?

"அது வெறும் கவிதை அல்ல"

_____________________________________

சொற்கீரன்.


(அவர் பதிவுக்கு என் பினூட்டம் இது)


காதல் கலைடோஸ்கோப்பை

திருப்பினால்

இப்படியும் ஒரு

கோணமா?

கோணலா?

______________________________‍

சொற்கீரன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக