செவ்வாய், 14 ஏப்ரல், 2026

வெத்தாண்டு

 


தமிழா

என்று யாருமே உன்னை

அழைத்ததில்லை.

ஊமை செவிடுகள் போன்று

"அறுபது தடவைகள்"

உன்னை

கைதட்டி அழைத்தது போல்

வெறும் கூச்சல்களை தந்தவர்க்கா

பூரண கும்ப மரியாதை?

தமிழா

நீ மரத்தமிழனிலிருந்து

என்றைக்கு

மறத்தமிழன் ஆகிறாயோ

அப்போது தான் உனக்கு

புத்தாண்டு.

அது வரை இது

வெத்தாண்டு தான்.

___________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக