வாக்குறுதிகளும்
நலத்திட்டங்களும்
வானம் முட்டின.
உங்களுக்கு தனியே
இனி ஒரு ரிசர்வ் வங்கி.
பட்டன் தட்டினால்
கரன்சி வெள்ளம்.
ஒரு கனவு கண்டேன்
ஆயிரம் ட்ரோன்கள்
அணிவகுக்க
எங்கோ இருக்கும்
என் குட்டித்தீவு
மீட்டு வருவதாய்.
முடியுமா?
வெற்றிக்கழகத்தாரே!
அதற்கென்ன
விசில் ஊதினால்
எங்கள் அலாவுதீன் பூதங்கள்
அனைத்தையும் செய்யும்.
அப்படியே!
இப்போதே பிடித்துக்கொள்ளுங்கள்
என் கிளிக்குகளை.
கணிப்பொறி தட்டினால்
அடுத்த நிமிடமே
கோட்டையின் சிம்மாசனம்
உங்களுக்கே..
...............
அங்கே இங்கே
மொட்டைவெயில்ல போயிட்டு
வந்து
இப்படியா
சவம் மாதிரி தூங்கறது...
போதும் போதும்
கனவுல கோஷம் போட்டது.
சாப்ட வாங்க!
_____________________________________________
அலெக்ஸீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக