ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

ஒரு பிரபஞ்ச அற்புதம் தான்./26.04.26

 



26.04.26 அன்று முகநூலில்

வண்ணதாசன் அவர்களின் கவிதை ஒன்று

ஒரு கருப்பு நாயின் "வீச்சம்" ஒன்றை

கல் பாக்கத்து கதிர் வீச்சாய் சொற்கரு பிளந்த‌

அணு அலைகளாய் விரித்த விந்தையை

இங்கு கவிதையாக்கியுள்ளேன்.

_____________________________________________________


நானும் இப்படித்தான்

எங்கள் வீட்டு

வெள்ளை பொமரேனியனின்

அந்த "மூசு மூசு" மூச்சுகளின்

பூக்குளியலில்

திளைத்திருக்கிறேன்.

அதனுள் கீற்றாடும் அந்த 

பைரவ நாற்றம் அல்லம் வீச்சம்

ஏதோ ஒரு க்ரேண்ட் யுனிஃபிகேஷனுக்கு

கணித சமன்பாடு சொன்னது.

கவிதைகளுக்குள்ளும்

பெட்ஸ் 

கூடு விட்டு கூடு பாய்ந்து

சொல் எலும்புத்துண்டுகளை

சுரண்டி சுரண்டித்

தின்னு கொண்டு தான் இருக்கும்.

ஓவியத்தின் எண்ணெய் வண்ணம்

எத்தனை தூரிகைகளைக்கொண்டு

உங்களை கிச்சு கிச்சு மூட்டும்?

கித்தான் மேல் பரப்பின்

எண்ணெய் மினுமினுப்பில்

எங்கிருந்தோ உட்கார்ந்து கொண்டு

கன்னத்தின் பளிங்கு கொண்டு

உள்ளத்தின் கரடு முரடுகளை

வழவழப்பாக்கும் அவளின் ஓவியம்

நிச்சயம் 

ஒரு பிரபஞ்ச அற்புதம் தான்.

எப்படி  வைத்துப்பார்த்தாலும்

ஓவியம் தீக்கொழுந்துகளின்

நெருப்பு மயிர் வருடல்களில் தானே

தன் தூரிகையைக்

கருவுயிர்த்துக்கொண்டிருக்கும்.

_______________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக