வியாழன், 9 ஏப்ரல், 2026

கி ரா

 

கி ரா

______________________________________________________________________________

எழுத்துக்களுக்குள் தெலுங்கு மக்கள் ஒரு தமிழ் மண்ணை பதியமிட்டு செவ்விய இலக்கியம் ஒன்றின் வெளிச்சத்தை தமிழ் உயிர்ப்பின் காவியமாக காட்டிசென்ற ஒரு எழுத்தாளப்பெருந்தகை கி.ரா. கரிசல் இலக்கியம் என்ற‌ ஒரு புதிய எழுத்துக்களின் வெளிச்சத்தநமக்குப்பாய்ச்சியவர் கி.ராஜநாராயணன். மண்ணின் நரம்போட்டமே மனிதர்களின்ஆசை அவலங்களில் ரத்தம் வற்றிப்போன‌ பாழின் படுகை தான்.அந்த கோவில்பட்டி காய்ஞ்சக் காட்டு மனச்சித்திரங்களை அருமையாக தீட்டியவர் கி.ரா.அவரது "வேட்டி" எனும் சிறுகதைக்கே ஆயிரம் ஞானபீடங்களின் விருது வழங்கலாம்.நகைச்சுவை போன்று தெரியும் அவர் கதைகளில் எல்லாம் நம் உள்மனத்தின் எரிமலைகள் கொழுந்து விட்டு எரிவது நன்றாக தெரியும்.எழுத்துக்குள் மக்களின் மண்ணும் மணமும் எப்படி வெளிச்சம் காட்டும் என்பதே அவரது இலக்கியப் பாணி.

_______________________________________________________சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக