புதன், 13 டிசம்பர், 2017

ஆசை




ஆசை
=======================================ருத்ரா

இது எங்கு
வேர் பிடிக்கிறது?
எப்படி
கிளை பரப்புகிறது.?
ஆலம்பழத்தை
தின்னும் கிளிக்குள்
கடுகையும் விட சிறிதான
அந்த விதை தான்
இங்கு
எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்டு.
எல்லாவற்றின் மெமரியும்
அதனுள் தான்.
மனிதனிலிருந்து
பீறிடும் இந்த வர்ண நிழல்களில்
உண்மையின் ஒளி
மறைவு பட்டிருக்கிறது.
மனிதன்
மனிதனுக்குள்ளேயே
மூழ்க வேண்டும்.
"மனிதத்தை" மட்டும்
வடிகட்டி பார்க்க வேண்டும்.
எல்லா மனிதர்களுக்குள்மட்டும் அல்ல
எல்லா உயிர்த்துளிகளுக்குள்ளும்
தோய்ந்து திளைக்க வேண்டும்.
வெறுங்கற்பனை தான்.
இந்த மூளி அறிவில் தான்
எல்லா மதங்களும் போதனைகளும்
கிடை மட்டமாய்
படுத்து விறைத்துப்போகின்றன.
மனிதா
உன் "செல்ஃபி"க்குள்
உன்னைத் தேடுவதன் மூலம்
இந்த டிஜிட்டல் பூதம்
உன்னை விழுங்க அனுமதித்து விடாதே.
உன் கல்லறைகளை
இந்த "பட்டன்களுக்குள்"
பதியம் இட்டு விடாதே.
இது ஒரு நுண்ணறிவில் பின்னப்பட்ட வலை.
அறிவுகளை நீ கடக்கவேண்டும்.
சில்லறை ஆசைகளில் நீ
சிதிலம் ஆகாமல்
அந்தப்பேரறிவின் ஒரு
பெருஞ்சிற்பத்தை
எப்போதுமே செதுக்கிக்கொண்டிரு !

=============================================

2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி திரு.நாகேந்திரபாரதி அவர்களே

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக