புத்தாண்டு குறும்பாக்கள் (2018)
===========================================ருத்ரா
தமிழருவி மணியன்
காமராஜ் காமராஜ் என்று
இவர் கூறியது
அவர் காதில் இப்படித்தான்
கேட்டிருக்குமா?
மைசூரின்
சாமராஜ் சாமராஜ் என்று.
-----------------------------------------------------
பன்னீர் செல்வம்
இருங்கள் டெல்லியைக்கேட்டு
சொல்கிறேன்
2018 பிறந்து விட்டதா
இல்லையா என்று.
-----------------------------------------------------
எடப்பாடி
ஒரே ஒரு ஊரில்
ஒரே ஒரு காலண்டர் தான்
இருந்ததாம்.
2018 கொண்டாடப்படவே
இல்லையாம்.
ஏனெனில் அது
2008 ஆம் ஆண்டு காலண்டராம்!
------------------------------------------
ரஜனி
குடு குடுப்பை காரராய்
வந்து
வாழ்த்து சொன்னார்.
நல்ல "காலா" வருகுது!
நல்ல "காலா" வருகுது !
-----------------------------------------------
தினகரன்
2018ல் 2017 இருக்கிறது.
2017 ல் ஆர்.கே நகர் இருக்கிறது.
ஆர்.கே நகரில் அவர்கள்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்
அதிமுக எங்கே இருக்கிறது என்று
----------------------------------------------------
ஜெயக்குமார்
அவர் எங்களைச்
சொல்லவில்லை.
எங்கோ
ஏழு மலை தாண்டி
ஏழுகடல் தாண்டி
ஒரு குட்டித்தீவில்
அதை விட குட்டியாய்
உள்ளக்கட்சியை
குறிப்பிடுகிறார்.
--------------------------------
செல்லுர் ராஜு
அவர் சும்மா
ஜோக் அடிக்கிறார்.
அவர் ரசிகன்
அல்லவா நான்.
-----------------------------------
ஸ்டாலின்
சாதகமா?
பாதாகமா?
என்றா கேட்டீர்கள்?
அது அவர் படம்.
ஷூட்டிங்க் எப்போது?
தெரியாது.
------------------------------------------------------
மோடிஜி
மோடிஜி
மோடிஜி
மோடிஜி
...................
இதற்கு மேல்
எழுதினால்.
எச்.ராஜா சீறுவார்
இந்துக்கள் மனம்
புண் பட்டது என்று!
-----------------------------------------------------
(நகைச்சுவைக்கவிதைகள்)
2 கருத்துகள்:
நல்ல நையாண்டிகள் இரசித்தேன் ஐயா.
புத்தாண்டு வாழ்த்துகள்.
புத்தாண்டை முன்னிட்டு இந்த நையாண்டிகளை ரசித்த திரு கில்லர்ஜி அவர்களே மிக்க நன்றி.
அன்புடன் ருத்ரா
கருத்துரையிடுக