முகமே இல்லாத ஒரு ஜெயமோகன்
====================================================ருத்ரா
வெண்முரசம் என்று
தலையணை தலையணைகளாக
பரண்களில் கிடக்கும்
பழைய முரண்களை
குவித்துக்களிக்கும்
ஜெயமோகன்களுக்கு
சமுதாயப்புரட்சி பற்றி
பீறிடும் எழுத்துக்களை
எப்படியாவது
மழுங்களிடித்துப்பார்ப்பதே
இலக்கிய வேள்விகள் ஆகும்.
இப்படி
மனத்துக்குள் மகிழ்வதற்கே
மக்கள் கவிஞர் இன்குலாப்
பற்றிய விமர்சனத்தை
அவர்
வெளியிட்டிருக்கிறார்.
இந்த ஆட்சியில் தான்
விருது நிராகரிப்புகள் அதிகம்.
இலக்கியம் என்பது
சிந்தனையை
கூர்தீட்டிக்கொண்டிருப்பதே ஆகும்.
அந்த உரசலில்
சமுதாய தீப்பொறிகள்
தெறிப்பதில்
புதிய யுக வெளிச்சம் தோன்றும்.
பழைய பஞ்சாங்கங்களை
புதிய நவீனத்துவம்
புதிய புதிய பின் நவீனத்துவம்
என்ற பாணிகளில்
படைத்து
சிந்தனைகளை
சிரச்சேதம் செய்யும்
ஆதிக்கத்துக்கு
ஆலவட்டம் வீசுபவர்களுக்கு
இன்குலாப் குடும்பத்தினரின்
விருது நிராகரிப்பு
கோபமூட்டியதில்
ஆச்சரியம் ஒன்றுமில்லை.
புளியமரத்துக்கதையையும்
அதில் குடியிருக்கும்
சித்தாந்த காழ்ப்பின்
வேதாளங்களையும் மட்டுமே
இங்கு பதியம் இட்டு
கும்மியடித்துக்கொண்டிருக்கும்
விஷ்ணுபுரத்துக்காரர்களுக்கு
சிவப்பு விடியல் சமாசாரங்கள்
மகா அலர்ஜியை
உண்டு பண்ணுவதால் தான்
அந்த விருது நிராகரிப்பை
எகத்தாளத்துடன்
கெக்கலிப்பு செய்கிறார்.
முகமே இல்லாமல்
ஜெயமோகன் அவர்கள்
கண்ணுக்கே தெரியாத
ஒரு முகத்தை
முகமாக மாட்டிக்கொண்டு
கிழிந்து போன கனவுகளுக்கு
முகாம் நடத்திக்கொண்டு
இருக்கிறார்.
அவர் எழுத்துக்கள் தமிழ் வாசம்
தாங்கியிருப்பதால் தான்
தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள் அவரை!
அந்த உரிமையை
அவர் தமிழ் இனத்துக்கே
கத்தி தீட்டும்
எழுத்துக்களாய் ஆக்கி
தூவி விட்டதும் உண்டு.
இன்குலாப் என்ற
மனித நேய சமுதாய வார்ப்பை
அவர் பழமை வாதம் கொண்டு
முடக்க நினைக்கிறார்.
அவர் பேனாவின் கூர்மை
தமிழின் கதிர்வீச்சு தந்தது தான்.
பழைய நூற்றாண்டுகளின்
மரவட்டையாய்
அவர் சுருண்டு கிடக்கட்டும்
பரவாயில்லை.
அவற்றின்
மத ஆதிக்கத்தை
வர்ண வர்ண மத்தாப்பு கொளுத்தி
மாய்மாலம் பண்ணும்
"காவி"யத்தை அவர்
நிறுத்திக்கொள்வதே
அவர் எழுத்துக்களுக்கு
அவர் காட்டும் கற்பு நெறி.
============================================
====================================================ருத்ரா
வெண்முரசம் என்று
தலையணை தலையணைகளாக
பரண்களில் கிடக்கும்
பழைய முரண்களை
குவித்துக்களிக்கும்
ஜெயமோகன்களுக்கு
சமுதாயப்புரட்சி பற்றி
பீறிடும் எழுத்துக்களை
எப்படியாவது
மழுங்களிடித்துப்பார்ப்பதே
இலக்கிய வேள்விகள் ஆகும்.
இப்படி
மனத்துக்குள் மகிழ்வதற்கே
மக்கள் கவிஞர் இன்குலாப்
பற்றிய விமர்சனத்தை
அவர்
வெளியிட்டிருக்கிறார்.
இந்த ஆட்சியில் தான்
விருது நிராகரிப்புகள் அதிகம்.
இலக்கியம் என்பது
சிந்தனையை
கூர்தீட்டிக்கொண்டிருப்பதே ஆகும்.
அந்த உரசலில்
சமுதாய தீப்பொறிகள்
தெறிப்பதில்
புதிய யுக வெளிச்சம் தோன்றும்.
பழைய பஞ்சாங்கங்களை
புதிய நவீனத்துவம்
புதிய புதிய பின் நவீனத்துவம்
என்ற பாணிகளில்
படைத்து
சிந்தனைகளை
சிரச்சேதம் செய்யும்
ஆதிக்கத்துக்கு
ஆலவட்டம் வீசுபவர்களுக்கு
இன்குலாப் குடும்பத்தினரின்
விருது நிராகரிப்பு
கோபமூட்டியதில்
ஆச்சரியம் ஒன்றுமில்லை.
புளியமரத்துக்கதையையும்
அதில் குடியிருக்கும்
சித்தாந்த காழ்ப்பின்
வேதாளங்களையும் மட்டுமே
இங்கு பதியம் இட்டு
கும்மியடித்துக்கொண்டிருக்கும்
விஷ்ணுபுரத்துக்காரர்களுக்கு
சிவப்பு விடியல் சமாசாரங்கள்
மகா அலர்ஜியை
உண்டு பண்ணுவதால் தான்
அந்த விருது நிராகரிப்பை
எகத்தாளத்துடன்
கெக்கலிப்பு செய்கிறார்.
முகமே இல்லாமல்
ஜெயமோகன் அவர்கள்
கண்ணுக்கே தெரியாத
ஒரு முகத்தை
முகமாக மாட்டிக்கொண்டு
கிழிந்து போன கனவுகளுக்கு
முகாம் நடத்திக்கொண்டு
இருக்கிறார்.
அவர் எழுத்துக்கள் தமிழ் வாசம்
தாங்கியிருப்பதால் தான்
தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள் அவரை!
அந்த உரிமையை
அவர் தமிழ் இனத்துக்கே
கத்தி தீட்டும்
எழுத்துக்களாய் ஆக்கி
தூவி விட்டதும் உண்டு.
இன்குலாப் என்ற
மனித நேய சமுதாய வார்ப்பை
அவர் பழமை வாதம் கொண்டு
முடக்க நினைக்கிறார்.
அவர் பேனாவின் கூர்மை
தமிழின் கதிர்வீச்சு தந்தது தான்.
பழைய நூற்றாண்டுகளின்
மரவட்டையாய்
அவர் சுருண்டு கிடக்கட்டும்
பரவாயில்லை.
அவற்றின்
மத ஆதிக்கத்தை
வர்ண வர்ண மத்தாப்பு கொளுத்தி
மாய்மாலம் பண்ணும்
"காவி"யத்தை அவர்
நிறுத்திக்கொள்வதே
அவர் எழுத்துக்களுக்கு
அவர் காட்டும் கற்பு நெறி.
============================================
6 கருத்துகள்:
ஜெயமோகன் வெறும் ஒரு சாதாரண தமிழன் அல்ல. அவன் ஒரு இந்து தமிழன். இதில் எல்லாமே புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
இந்துத்தமிழனின் தொன்மை அவன் ஒரு சிந்து(வெளி)த்தமிழன் என்பதே.இதை மறைக்கவே இந்த போலிக்கூட்டங்கள் மத அரசியல் நடத்துகின்றன.
உங்களும் கவிதைய் ஒவ்வொரு வார்த்தையிலும் தார்மீக கோபம் தெரிகிறது.
மாபெரும் அறசீற்றத்தின் ருத்ர தாண்டவம்
உங்களும் கவிதைய் ஒவ்வொரு வார்த்தையிலும் தார்மீக கோபம் தெரிகிறது.
மாபெரும் அறசீற்றத்தின் ருத்ர தாண்டவம்
உங்களும் கவிதைய் ஒவ்வொரு வார்த்தையிலும் தார்மீக கோபம் தெரிகிறது.
மாபெரும் அறசீற்றத்தின் ருத்ர தாண்டவம்
அன்பான கதிர்முருகன் அவர்களே
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
அன்புடன் ருத்ரா
கருத்துரையிடுக