திங்கள், 4 டிசம்பர், 2017

மாறியும் மாரியும்

மாறியும் மாரியும் 
===========================ருத்ரா 



வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்,
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்று நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், 130

இவை "கடியலூர் உருத்திரங்கண்ணனார்" எழுதிய "பட்டினப்பாலையின் "வரிகள் ஆகும்.காவிரி பூம்பட்டினத்தின் சிறப்பு பற்றிக்  கூறும் சங்கத்தமிழ் இலக்கியத்தின் பத்துப்பாட்டுகளுள் ஒன்றாகும்.

இயற்கை இயக்கங்கள் எனும் இயற்பியலில் "மழை" தோன்றும் முறையை
விளக்கும் வரிகள் இவை.கடல் நீர் வெப்பத்தினால் ஆவியாகி மேலே காற்று அழுத்த தாழ்வு மண்டலங்களை உருவாக்கி அவையே மழையாகி  மலை மீது பொழிகிறது.மலை நீர் வெள்ளமாய் அருவியாய் நிலம் நோக்கிப் பாய்ந்து
தண்ணீர் ஆற்றலை எங்கும் பரப்புகிறது.கடலும் நிலமும்  "மாறிமாறி "
வெப்பத்தின் இயக்கத்தினால் "மழை பொழிவு"எனும் "மாரி"யை உண்டாக்குகிறது.எனவே தமிழர்கள் தங்களுக்கு "கண்கண்ட" கடவுளாய்
இந்த "மழையை"தான் வழிபடுகிறார்கள்.நிலம் தமிழர்களுக்கு தாய் போன்று உருவகப்படுத்தபடுவதால் தான் அந்த நிலமும் கடலும் இயைந்த தாய்த்தெய்வமாக "மாரி அம்மன்" தமிழர்களால் வணங்கப்படுகிறது.
"நிலம் எனும் நல்லாள் நகும்" வள்ளுவர் கூறுவதும் இதன் அடிப்படையில் தான்.பூமியின் சுழற்சியே(சைக்கிள்) இந்த "மாறி மாறி" தோன்றும் இயற்கை
நிகழ்வுகளை தோற்றுவிக்கிறது."மாறி " என்பது தான் கணித இயலில் வரும் "
"வேரியபிள் "(variable) ஆகும்.இந்த மாறிக்குள் தான் நம் "மாரியம்மன்களும்"
மாக .மாறுதல் மாருதல் இரண்டும் ஒரே பொருளைக்குறிக்கலாம்
என்பதே என் கருத்து.தமிழ் இலக்கணத்தில் "மரூஉ" என்ற சொல் "மாறி"வரும் ஒலிப்பின் இயல்பையே சுட்டுகிறது.மருவுதல் என்னும் சொல் மாருதல் என்று
நீட்டல் விகாரம் அடைந்தது எனக்கொள்ளலாம்.பரி ..பரிதல் என்னும் சுற்றுதல் உலவுதல் எனும் பொருளில் வருகிறது.சூரியனுக்கு "பரிதி" எனும் சொல்லே தூய தமிழ்சசொல்."பரி"என்ற இந்த சொல்லை சமஸ்கிருதக்காரர்கள் "பறி"த்துக்கொண்டார்கள்.அதுபோல் தான் மருவுதல்
மருதம் ஆகி "காற்று மழை"ஆகிய இயற்கை நிகழ்வுகளின் களமாக அதனால் இயங்கும் உழவுத்தொழில் செழிக்கும் "மருதம்"ஆக "மருதத்திணை"யாக  நாம் குறிப்பிடுகிறோம் .இதுவும் "மாருதி" எனும்
காற்றுத்தெய்வமாக (அனுமான்) சமஸ்கிருதத்துக்கு போய்விட்டது.

தோண்டி தோண்டி பார்த்தால் சமஸ்கிருதத்தின் ஆணி வேர் தமிழே
என அறியலாம்.அம்மொழியின் மீது மூடிக்கிடக்கும் "ஐரோப்பிய" சொற்கள் கூட  "திரை"எனும் கடல்கள் ஓடி (திரைகடல் ஓடி "திரைவியம்"சேரத்த) திரைவிடர் எனும் திராவிடத்தமிழர்கள் கொண்டு வந்தவை தான்.அந்த ஒலிப்புகளையெல்லாம் உருட்டித்திரட்டி சமஸ்கிருதம் ஆக்கி அதை
தமிழ் மொழிக்குள்  "மறைத்து" வைத்திருந்தோம் எனலாம்..இதைத்  தான்
தொல்காப்பியர் "மறை"மொழி எனக்குறிப்பிடுகின்றார். இரண்டும் பக்கம் பக்கமாய் ஆனால் சேராமல் இது வரை வழங்கி வருகிறது.இப்படி "மறைத்து வைத்து சொல்லியவையே "நான்கு மறைகள்" ஆயிற்று.சமஸ்கிருதமும்
தமிழன் கொடை தான். சிந்து வெளித்தமிழின் "ஊற்றுகண்" திறந்ததில்
தெரிந்த வெளிச்சமே இவையெல்லாம்.
"

===========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக