ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ரஜனி உடைத்தது பலூன் அல்ல!

ரஜனி உடைத்தது பலூன் அல்ல!
================================================ருத்ரா

அந்த‌
"ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்"
பூசணிக்காய் உடைந்தது!
ஆனால்
நிச்சயம் அது பலூன் அல்ல.

இந்த கருப்பின் நெருப்புவண்ணம்
தீட்டிய சாசனம்
அன்றைய‌
வெள்ளைச்சாசனத்தின்
மேக்ன கார்ட்டாவுக்கு
சற்றும் சளைத்தது அல்ல.
ஆனால்
ஒரு அரசியல் வெளிச்சத்தின்
சுதந்திர வேட்கை இது.


"நான் அரசியலுக்கு வருவது உறுதி
தனிக்கட்சி தொடங்குவேன்.
234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.
வாக்குறுதிளை நிறைவேற்றாவிடில்
மூன்று ஆண்டுகளில் ராஜினாமா.
கடந்த ஓராண்டு ஆட்சியில்
தமிழ் நாட்டுக்கே தலைகுனிவு
(அதாவது சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது)"

ஆம்!
சிங்கம்
தனியாகத்தான் புறப்பட்டிருக்கிறது.

கவியரசு வைரமுத்து
இந்த கலைஞரை தலைவராகத்தான்
பார்க்கிறார்.
உள்ளுக்குள் இவரும் நம் கலைஞர் தான்
என்ற
ஏக்கத்தை கசிய விட்டுக்கொண்டே.
அந்த
தின் ரெட் லைன்
இடைவெளி
உணமையிலேயே
ஒரு சிவப்பு விடியலுக்கு
கோடு தீட்டுமா?
தெரியவில்லை.
இவரது அரசியல் ஆன்மீகம்
விரிக்கும் கொடியின்
மூன்று வர்ணத்துள்
நான்கு வர்ணம் நிச்சயம்
புதைத்திருக்காது
என நம்புவோமாக.
மானிட நேயமிக்க
இவரது மனசாட்சிக்குள்
அலையடிப்பதில்
மற்ற மதங்களை
இடித்துத்தள்ளும் கடப்பாரைகள்
மூழ்கடிக்கப்பட்டுத்தான் கிடக்கின்றன
என்பதும் தெளிவாகத்தான்
தெரிகிறது.
இவரது
குருவின் குரலுக்குள்
ததும்புவது நிச்சயம்
குருமூர்த்திகள் அல்ல
என்பதும்  பளிச்சென்று தெரிகிறது.
இவரது ரசிகர்கள்
இனி விசில் அடிப்பவர்கள் அல்ல.
ஜனநாயகத்தின் காவலர்களாய்
இனி
விசில் ப்ளோயர்கள் அவர்கள்.
நீதிக்கும் நேர்மைக்கும்
குரல் கொடுக்கும்
எச்சரிக்கையாளர்கள்
அவர்கள்.
இப்படித்தான்
ரஜனி  ஓவியம் தீட்டியிருக்கிறார்.
புரியாதவர்களுக்கு
அது ஒரு பிக்காஸோ ஓவியம்.
சிலர்
அதை ரவிவர்மாசட்டத்துள்
அடக்கிப்பார்த்தாலும்
அதில் ஒரு சமுதாயச்சீற்றமும்
வரணங்கள் அற்ற ஒரு
ஓவியத்தைக் காட்டவே செய்கிறது.

நம்மை நாம் நன்றாக
கிள்ளிப்பார்த்துக்கொள்வோம்
இது நிச்சயம்
சினிமா  அல்ல என்று.

=========================================================
31.12.2017










2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

வைரமுத்து மீது எனக்கு தொடக்கம் முதலே சந்தேகம் உண்டு இவன் தமிழன்தானா ?

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

சினிமா உலகில் யாவரும் நண்பர்களே !

கருத்துரையிடுக