வெள்ளி, 8 டிசம்பர், 2017

கடலுக்கு பெயரை மாற்றுங்கள்

கடலுக்கு பெயரை மாற்றுங்கள்
==============================================ருத்ரா


அங்கே மிகக்கனமான‌
மழையிலிருந்து
கனமான மழை பெய்யும்.
இங்கு கடல் சீற்றம்
இருக்கிறது.
புயல் கருக்கொண்டு
இன்னும் 48 மணி நேரத்தில்
இங்கு கரையைக்கடக்கும்.
மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்
.....
இப்படியெல்லாம்
துல்லியமாய்
தன் எதிரே
முப்பது நாப்பது
மைக்குகள் வரிசை கட்டி
அமர்ந்திருக்க‌
அறிவிப்புகள் தரும்
"வானிலை அறிக்கை"
அந்த‌
"ஒக்கி" புயல் பற்றி
துல்லியம் காட்டி
எச்சரிக்கை செய்ய்வில்லையே!
அது ஏன்?

ஒரு விளம்பரம் ஞாபகத்துக்கு
வருகிறது.

"துணிகளில் அழுக்கு சரியாக‌
போகமாட்டேன்கிறது.
வாஷிங் மெஷினை மாற்றவேண்டியது தான்."

மாற்றவேண்டியது
மெஷினை அல்ல.வாஷிங் பவுடரை"

...............

புயல் எச்சரிக்கை
சரியாக கிடைக்கவில்லை.
பேசாமல் "ஒக்கி" எனும்
பெயரை மாற்ற வேண்டியது தான்.

மாற்றவேண்டியது
புயலின் பெயரை அல்ல.
கடலின் பெயரை..
எத்தனை நாளைக்குத்தான்
"அரபி"க்கடல் என்று
அழைத்துக்கொன்டிருப்பது?

சிந்தனைகளில்
ஒரு "ஃபோபியா" நோயாக‌
மாறும் அறிகுறிகள் தான்
அந்த அச்சம் நிறைந்த‌
ஆயிரமாயிரம் புயல்களையும் விட‌
கொடூரமானது!

_____________________________________________
பொறுப்புத்துறப்பு :-
இது கவிதை மட்டுமே.
இது முழுக்க முழுக்க கற்பனையே.
_____________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக