வெள்ளி, 29 டிசம்பர், 2017

இதோ வாய் திறந்து விட்டார் ரஜனி!

இதோ வாய் திறந்து விட்டார் ரஜனி!
========================================ருத்ரா

இதோ வாய் திறந்து விட்டார் ரஜனி!
ஆமாம்
இதோ வாய் திறக்கப்போகிறார்.
வார்த்தைகளின் வெள்ளம்
சீறத்துவங்கும்!
அலைகள் ஆர்ப்பரிக்கும்.
ஒரு விரல் தான்
அசைப்பார்.
அத்தனை கோடி விரல்களும்
மின்னணுப்பொறி பட்டன்களை
அழுத்தும்.
அவர் வருவார்.
அவர் கையில் நம் செங்கோல்.
அவர் தான் கடவுள்.
அவர் கொஞ்சம் கண்ணைமூடினாலும்
அதுவே
குண்டலினி சக்தி.
அந்த சக்தி
காவிரியை திருப்பி
நம் மண்ணுக்குள்
கொண்டு வந்து விடும்.
இந்த பரங்கிமலையையும்
பல்லாவரம் குன்றையும்
பார்த்து பார்த்து சலித்தவர்களுக்கு
இமயமலைகளுக்கெல்லாம்
ஒரு இமயமலையாய்
ஒரு புதிய இமயமலையை
நம் செங்குன்றம் அருகேயே நிறுத்தும்.
ஒரு மந்திரச்சொல்லே
ஒரு பெயர் ஆகும்.
அதை எப்படி திருப்பிப்போட்டாலும்
அப்படியே ஒலிக்கும்.
ஆம்.."பாபா."
பாஷா பாஷா என்று
ஒரு படத்தில் தூள்  கிளப்பியது
போல் தான் இதுவும்.
லஞ்சம் ஊழல்கள்
எனும்
அசிங்கமான சொற்கள்
அகராதியிலிருந்து
அறவே கழுவி கழுவி ஊற்றப்படும்.
துட்டுக்கு ஓட்டு
மூச்!
அப்புறப்படுத்துங்கள்
அந்த அற்பப்பதர்களை.
இதோ
பொற்காலம்
நம் இமை தூரத்தில்.
.....................
அதெல்லாம் இருக்கட்டும்.
காலம் வரும்போது மாற்றம் வரும்.
என்கிறார்.
அது காலமா? "காலா"வா?
நமக்கு தெரியவில்லை.
நாம் சாதாரண ரசிகர்கள் .
தலையை சொரிந்து கொள்வதை தவிர
வேறு என்ன செய்வது?
தலைவரோடு போட்டோவுக்கு
போஸ் கொடுப்பதே போதும்.
நாட்டின் பொருளாதார பிரச்சினைகள்
எல்லாம்
இனி காணாமல் போய்விடும்.
மேலும் இப்போது
எம்.ஜி.ஆர் பாடல்களோடு
இழைந்து நிற்கிறார்.
எம் ஜி ஆர்  டி எம் எஸ்ஸுக்கு
வாயசைத்தார்.
ரஜனியும் எம்.ஜி.ஆர் வாய் அசைவிற்கே
வாய் அசைக்கிறார்.
"வாய்ஸ்" கொடுத்தவர்
வாய் அசைப்பில் வந்து நிற்கிறார்.
இனி என்ன சொல்லப்போகிறாரோ?
"காலம்" தான் பதில் சொல்லும்
என்கிறார்.
எல்லாவற்றுக்கும்
போதாத காலம் ஒன்று வரலாம்.
ஆனால் காலத்திற்கேவா
இப்படி  போதாத காலம் வருவது?
சரி.
அப்புறம் என்ன?
வீட்டுக்கு போய் உங்கள்
குழ்ந்தை குட்டிகளோடு போய்
சந்தோஷமாக இருங்கள்.

தலைவர் பிரகடனம் ஏதாவது உண்டா?
.................................
.................................
சற்று பொறுங்கள்
இன்னும் ஒரு தாள் பாக்கி
தினசரி காலண்டரில்.
அந்த இலையும் உதிரட்டும்
வசந்தம் வந்து
விடியட்டும்.

===================================================





2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

தலைவனுடன் புகைப்படம் எடுப்பதையே விழாவாக நடத்தும் கொடுமை தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்கிறது.

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் ஐயா...
எனது தளத்தில் பதிய வேண்டிய கருத்துகளை உங்களது தளத்தில் சொல்வதுதான் எனக்கு தவறாக தெரிகிறது.

எனது பதிவை திட்டி எழுதிய முகம் அறியாத, முகவரி இல்லாத நட்பூக்களின் கருத்தைக்கூட வெளியிட்டு அதற்கு மறுமொழி தருபவன் நான்.

ஆகவே தயக்கமின்றி தங்களின் உண்மையான கருத்தை எழுதலாம்.

நட்புடன்-கில்லர்ஜி

கருத்துரையிடுக