இந்த கவிதைகள் எனும் கூழாங்கற்கள்...
===========================================ஜூன் ஜோர்டான்
இருட்டைக்குடைந்து
குழைய குழைய
நான் ஆக்கிய இந்த வரிகள்
உங்களை நோக்கித்தான்
வருகின்றன.
நீங்கள் யாராக இருப்பினும்
ஒரு இருட்டிலிருந்து
ஒளியை உறிஞ்சக்கூடியவராக
இருந்தால் சரி!
நீங்கள் தயாரா?
இந்த சொற்கள்
எனும்
கூழாங்கற்கள்
ஓடும் உங்கள் எண்ண ஓட்டத்தின்
ஓடைக்குள் விழுந்து
உருண்டு உருண்டு
எங்கோ சென்றுவிடலாம்.
மேலோட்டமான
இந்த எலும்புக்கூட்டு வரிகளுக்குள்
என் விருப்பங்களின் நீண்டவிரல்களும்
என் அன்பின் ரத்த சதைத் திரட்சிகளும்
உங்களை நெருடலாம்
இல்லை வருடலாம்!
மையை உதறித் தெளித்தாற்போல்
இந்த காகிதத்தில்
நான் ஒரு அந்நியம்.
என்னைச்சுற்றி இருக்கும் அந்நியம்
எனும் மக்களை
அன்பின் பேரின்ப வடிவமாய்
வழிபடுவதில்
எனக்கு மிக மிக விருப்பம்.
அந்த மக்கள் கடலில்
நீங்கள் நானாக இருக்கலாம்..
நானே நீங்களாக இருக்கலாம்.
================================================
மொழி பெயர்ப்பு .....ருத்ரா இ பரமசிவன்.
THESE POEMS
by
JUNE JORDAN
===========================================ஜூன் ஜோர்டான்
இருட்டைக்குடைந்து
குழைய குழைய
நான் ஆக்கிய இந்த வரிகள்
உங்களை நோக்கித்தான்
வருகின்றன.
நீங்கள் யாராக இருப்பினும்
ஒரு இருட்டிலிருந்து
ஒளியை உறிஞ்சக்கூடியவராக
இருந்தால் சரி!
நீங்கள் தயாரா?
இந்த சொற்கள்
எனும்
கூழாங்கற்கள்
ஓடும் உங்கள் எண்ண ஓட்டத்தின்
ஓடைக்குள் விழுந்து
உருண்டு உருண்டு
எங்கோ சென்றுவிடலாம்.
மேலோட்டமான
இந்த எலும்புக்கூட்டு வரிகளுக்குள்
என் விருப்பங்களின் நீண்டவிரல்களும்
என் அன்பின் ரத்த சதைத் திரட்சிகளும்
உங்களை நெருடலாம்
இல்லை வருடலாம்!
மையை உதறித் தெளித்தாற்போல்
இந்த காகிதத்தில்
நான் ஒரு அந்நியம்.
என்னைச்சுற்றி இருக்கும் அந்நியம்
எனும் மக்களை
அன்பின் பேரின்ப வடிவமாய்
வழிபடுவதில்
எனக்கு மிக மிக விருப்பம்.
அந்த மக்கள் கடலில்
நீங்கள் நானாக இருக்கலாம்..
நானே நீங்களாக இருக்கலாம்.
================================================
மொழி பெயர்ப்பு .....ருத்ரா இ பரமசிவன்.
THESE POEMS
by
JUNE JORDAN
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக