ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கல்லென் றவ்வே கதழ் பரித்திலையே

கல்லென் றவ்வே கதழ் பரித்திலையே
===================================================ருத்ரா

கடிமனைக் கூடல் அடைதெரு நாப்பண்
ஆவும் கன்றும் நடுநா நடுங்க
முரல்வன கேட்டு ஒளிநுதல் விதிர்ப்ப‌
அவல் படுத்தன்ன மிசை படுத்தன்ன‌
வியன் நகர் தோறும் கடுமா கலிப்ப‌
குளம்படி சீழ்த்த புண்படு பாங்கின்
மறுங்கிடை போன்ம் அளிந்தனன் ஆங்கே.
முள்மரம் கொல்லும் முளியிருள் ஆறு
கடாஅத்த நன்னன் எத்தை ஊரும்?
பாழ்த்த முன்னூறு பாரியின் ஊர்கள்
கல் புலம்ப புல் பலம்ப‌
புள்ளும் அரு நிழல் தேடி அலம்ப‌
படுதுயர் மகளிர் வெங்கணீர் வடிப்ப‌
அற்றைத்திங்களும் இற்றைத்திங்களும்
சுடுநீர் மழையென ஓவாது ஆகி
மெல்லுயிர் அவிதரு  கொடுநிலை தழீஇ
களிற்றடியன்ன  ஒருகண் அகல் பறை 
அறை தொறும் அறை தொறும்
அதிர் பட்டாங்கு நலிந்தனன் என் கொல் ?
பல்லியம் இயன்றன போலும் பல்குரல்
கேட்டனம் .கேட்டனம்  ஆயினும்
அவன் தேர் இரட்டும் படுமணி கேட்டிலம்.
கல்லென்றவ்வே யவன் கலிமா ஞான்றும்
கதழ் பரித்திலையே !கதழ் பரித்திலையே !

===================================ருத்ரா இ பரமசிவன்.

தலைவி தலைவன் வரும் தேரின் ஒலி கேட்க ஏங்கி
காத்திருக்கிறாள்.அவள் படும் பிரிவுத்துயரைபற்றி
நான் எழுதிய சங்க (நடைப்)பாடல் இது.

(பொழிப்புரை தொடரும்)

=======================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக