புதன், 6 டிசம்பர், 2017

பெயர் இடப்படாத ஒரு புயல் (விஷால்)

பெயர் இடப்படாத ஒரு புயல் (விஷால்)
===============================================ருத்ரா

வார்தா புயல்
ஒக்கி புயல்
சாகர் புயல்
இந்த புயல்களோடு
பெயர் இடப்படாத புயல்
ஒன்று
சென்னை தண்டையார் பேட்டையில்
சுழன்று சுழன்று வீசியது.
இளைய தலைமுறையின்
முறுக்கும் மிடுக்கும்
சுழித்து நின்றது அங்கே!
பின்புலம் அல்லது
பின்பலம் எதுவென்று
நோக்கர்கள்
புருவம் உயர்த்தினர்.
ஊடகங்கள்
அவரது
வேட்பு மனு காகிதங்களை
வைத்துக்கொண்டு
ஊஞ்சல் ஆடின.
லட்சுமணன் கோடு
போட்டபிறகு
அதை தாண்டும்
வரலாறு உண்டா?
என்ற கேள்விகள்
தீப்பற்றிக்கொண்டதில்
அவர் காகிதங்கள்
வெறும் காகிதக்கப்பல்
விடுவதற்குத் தான் பயன்படும்
என்று
சிலர் மூச்சு விட்டுக்கொண்டனர்.
ஷரத்துக்களை
"லென்ஸ்"வைத்துப் பார்த்து
மனுவை தள்ளுபடி செய்ததில்
ஆணையம் தப்பித்துக்கொள்ளலாம்.
அந்த‌
இடைவேளையில்
நடந்த சினிமாவுக்குள்
ஒரு "பேய்ப்படம்"இருந்திருக்குமோ
என்ற ஐயமும் திகிலும் தான்
நம் ஜனநாயகத்தின்
அடிவயிற்றில்
கொஞ்சம் புளியை கரைத்திருக்கிறது.
விஷால்
விடப்போவதில்லை
"தராசு பிடித்து"நீதி கேட்கப்போவதாய்
சூளுரை செய்திருக்கிறார்.
ஒரு டிவி
இந்த முதல் கோணல் முற்றும் கோணலுக்கான
அடியெடுப்பா?
என வினவுகிறது.
சுயேச்சைகளின் அந்த நீண்ட பட்டியலே
நம் உயிர்த்துடிப்பான‌
அரசியல் சாசனம்!
காத்திருப்போம்!
திரைகள் விலகட்டும்!

==============================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக