வியாழன், 28 டிசம்பர், 2017

சாவி



சாவி 
=================================ருத்ரா

அந்த கடல்மேல்
நீல விளிம்புகளில்
தள தளக்கும் 
அந்த கம்பளத்தின் மேல்
நடக்க ஆசை.
அதற்கு நான் ஒரு
தேவகுமாரன் ஆகவேண்டும்.
இந்த சாதாரண ஆபாசங்களின்
மானிடக்கூட்டை வைத்துக்கொண்டு
என்ன செய்வது?
ஓஷோக்களும் சென்களும்
கண்களை மூடி
உன் மனதைத்திறந்தால்
ஏழு கடல்களும்
உன் காலடியில் தானே
என்றார்கள்.
அன்று கண்களை மூடியவன் தான்
இன்னும் திறக்கவில்லை.
....................
....................

"சரி சரி சீக்கிரம் ஆகட்டும்
அந்த சதைக்கூளங்களை
போஸ்ட் மார்ட்டத்துக்கு
அனுப்புங்கள்..."

நடு ரோட்டிலா
தியானம் செய்தேன்.?


பரவாயில்லை
நான் படித்த 
ஒரு விஞ்ஞானப்புத்தகம்
ஏதோ ஒரு வழியின்
"ஸிப்பை" திறந்து விட்டிருக்கிறது.
"ஒரு புழுக்கூடு"(வொர்ம் ஹோல் )வழியே
வேறொரு பிரபஞ்சத்தில் இருக்கிறேன்.
ப்ரேன் காஸ்மாலஜி எனும் 
சவ்வுப்படல பிரபஞ்சத்தில் 
துடிப்பின் இழைகளாய் 
பரவி இருக்கின்றேன் 
(ஸ்ட்ரிங் தியரி)

வெப்பத்தின் நுட்ப ஆற்றல் 
புரட்டிப்போடுகிறது
பிரபஞ்ச்சத்தின் மைய விசைகளை.
அந்த டிஸ் ஆர்டரே 
என்ட்ரோபி எனும் சாவியாய் 
பிரபஞ்சங்களை எல்லாம்.
பூட்டுகின்றது  திறக்கின்றது.
என் விரலில் தான் 
அந்த சாவி சுழல்கின்றது. 

இப்போத
உங்கள்  பிரபஞ்சமே
என் காலடியில்.

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக