எங்கே அந்த அட்டைக்கத்திகள்?
===============================================ருத்ரா
ஆர்.கே.நகர்
இந்திய ஜனநாயகச்சீற்றங்களில்
தனித்த ஒரு தீவு ஆகிப்போனது.
ஜனநாயகத்தின் குரல்வளை
கரன்சிகளால்
நெறிக்கப்பட்டு நாக்குத்தள்ளிப்போய்
நிற்கிறது.
இந்த ஆட்சி மாற்றப்படவேண்டும்
என்பவர்கள்
பேச்சடங்கி மூச்சடங்கிப் போவதேன்?
கொசஸ்தலை யாறு கழிவுகளால்
கழுத்து நெறிக்கப்படுவதாய்
கண்ணீர் விட்டவர்கள்
இந்த ஓட்டுப்புழுக்கள்
நோட்டுகளால் நசுக்கப்படுவதை
காணாமல் கண்பொத்தி
விளையாடுகின்றனரா?
எல்லா தொகுதிகளுக்கும்
தேர்தல் அறிவியுங்கள் என்று
சூளுரைத்தவர்கள்
இந்த ஒற்றைத்தொகுதியில்
ஓட்டுப்போடும் நாணயம்
சீழ்பிடித்த ஒரு நோயால்
பீடிக்கப்பட்டிருப்பதை
தடுப்பதற்காகவேனும்
தேர்தலில் நின்று
தங்கள் கத்திகள் எல்லாம்
அட்டைக்கத்திகள் இல்லை என்று
நிரூபிக்க வேண்டாமா?
முதல்வராய்த்தான் வந்து
முகம் காட்டவேண்டுமா?
ஒரு நடிகர் வேட்புமனு கொடுத்தது
கூட
"அது ஏதோ ஒரு சார்லி சாப்ளின் படம்"
என்று வேடிக்கைதானே பார்க்கிறார்கள்!
இது அக்கினி ஆறு
காலை விட்டால்
ஆளே இல்லாமல் போய்விடுவோம்
என்ற அச்சமா இது?
ஆனந்தவிகடனில் புயல் வீசிக்கொண்டிருந்தது
என்று பார்த்தால்
அது இந்த வாரம் கரையைக்கடந்து
எங்கோ ஒரு சினிமா தேசத்துக்கு
போய்விட்டது.
இன்னொருவரோ
சிஸ்டம் கெட்டு விட்டது என்றார்.
அப்படியென்றால்
மரணப்படுக்கையில் இருக்கும்
ஜனநாயகத்தை சாகவிட்டு விட்டு
கண்ணீர் அஞ்சலிக்கு மட்டும்
கரெக்டாக வந்து
"லேட்டாய் வந்தாலும் லேட்டெஸ்டாக வருவேன்"
என்று
அந்த கீறல் விழுந்த ரிக்கார்டு ஒலிக்கு
வந்து வாயசைப்பாரா?
மற்றொருவரோ
அந்த சில்லறை இரைச்சல்
"மெர்சல்"ஐ வைத்துக்கொண்டு
ஆளப்போறான் தமிழன் என்று
திரைக்குப்பின்னே இருந்து
கூச்சல் கிளப்பிக்கொண்டு இருக்கிறார்.
ஏன் இந்த "மூவேந்தர்களும்"
கூட்டணி சேர்ந்தாவது
ஓட்டு நோட்டுக்கு
விலை போகும் இந்த
கொடுமையை
தடுத்த நிறுத்த முன் வரக்கூடாதா?
தேர்தல் நிறுத்தப்படவேண்டும் என்று
கசாப்புக்கத்தியை
தூக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு
சிக்னல் கொடுக்கும் அதிகாரத்தில்
உள்ளவர்கள் கூட
தெரு நாடகம் நடத்தி
பாசாங்கு காட்டுகிறார்கள்.
திரைப்படத்து
நிழல்கள் வாயசைப்பின் வீரத்தில்
ஒரு ஈ கொசு கூட
பயப்படப்போவதில்லை!
சினிமா வாய்ஸில் சீற்றம் கொள்ளும்
தீரர்களே
வெறும் "எம்ஜிஎம்" சிங்கமாக உறுமி
ஃபிலிம் காட்டுவதையாவது
கொஞ்சம் நிறுத்திக்க்கொள்ளுங்கள்.
===============================================================
===============================================ருத்ரா
ஆர்.கே.நகர்
இந்திய ஜனநாயகச்சீற்றங்களில்
தனித்த ஒரு தீவு ஆகிப்போனது.
ஜனநாயகத்தின் குரல்வளை
கரன்சிகளால்
நெறிக்கப்பட்டு நாக்குத்தள்ளிப்போய்
நிற்கிறது.
இந்த ஆட்சி மாற்றப்படவேண்டும்
என்பவர்கள்
பேச்சடங்கி மூச்சடங்கிப் போவதேன்?
கொசஸ்தலை யாறு கழிவுகளால்
கழுத்து நெறிக்கப்படுவதாய்
கண்ணீர் விட்டவர்கள்
இந்த ஓட்டுப்புழுக்கள்
நோட்டுகளால் நசுக்கப்படுவதை
காணாமல் கண்பொத்தி
விளையாடுகின்றனரா?
எல்லா தொகுதிகளுக்கும்
தேர்தல் அறிவியுங்கள் என்று
சூளுரைத்தவர்கள்
இந்த ஒற்றைத்தொகுதியில்
ஓட்டுப்போடும் நாணயம்
சீழ்பிடித்த ஒரு நோயால்
பீடிக்கப்பட்டிருப்பதை
தடுப்பதற்காகவேனும்
தேர்தலில் நின்று
தங்கள் கத்திகள் எல்லாம்
அட்டைக்கத்திகள் இல்லை என்று
நிரூபிக்க வேண்டாமா?
முதல்வராய்த்தான் வந்து
முகம் காட்டவேண்டுமா?
ஒரு நடிகர் வேட்புமனு கொடுத்தது
கூட
"அது ஏதோ ஒரு சார்லி சாப்ளின் படம்"
என்று வேடிக்கைதானே பார்க்கிறார்கள்!
இது அக்கினி ஆறு
காலை விட்டால்
ஆளே இல்லாமல் போய்விடுவோம்
என்ற அச்சமா இது?
ஆனந்தவிகடனில் புயல் வீசிக்கொண்டிருந்தது
என்று பார்த்தால்
அது இந்த வாரம் கரையைக்கடந்து
எங்கோ ஒரு சினிமா தேசத்துக்கு
போய்விட்டது.
இன்னொருவரோ
சிஸ்டம் கெட்டு விட்டது என்றார்.
அப்படியென்றால்
மரணப்படுக்கையில் இருக்கும்
ஜனநாயகத்தை சாகவிட்டு விட்டு
கண்ணீர் அஞ்சலிக்கு மட்டும்
கரெக்டாக வந்து
"லேட்டாய் வந்தாலும் லேட்டெஸ்டாக வருவேன்"
என்று
அந்த கீறல் விழுந்த ரிக்கார்டு ஒலிக்கு
வந்து வாயசைப்பாரா?
மற்றொருவரோ
அந்த சில்லறை இரைச்சல்
"மெர்சல்"ஐ வைத்துக்கொண்டு
ஆளப்போறான் தமிழன் என்று
திரைக்குப்பின்னே இருந்து
கூச்சல் கிளப்பிக்கொண்டு இருக்கிறார்.
ஏன் இந்த "மூவேந்தர்களும்"
கூட்டணி சேர்ந்தாவது
ஓட்டு நோட்டுக்கு
விலை போகும் இந்த
கொடுமையை
தடுத்த நிறுத்த முன் வரக்கூடாதா?
தேர்தல் நிறுத்தப்படவேண்டும் என்று
கசாப்புக்கத்தியை
தூக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு
சிக்னல் கொடுக்கும் அதிகாரத்தில்
உள்ளவர்கள் கூட
தெரு நாடகம் நடத்தி
பாசாங்கு காட்டுகிறார்கள்.
திரைப்படத்து
நிழல்கள் வாயசைப்பின் வீரத்தில்
ஒரு ஈ கொசு கூட
பயப்படப்போவதில்லை!
சினிமா வாய்ஸில் சீற்றம் கொள்ளும்
தீரர்களே
வெறும் "எம்ஜிஎம்" சிங்கமாக உறுமி
ஃபிலிம் காட்டுவதையாவது
கொஞ்சம் நிறுத்திக்க்கொள்ளுங்கள்.
===============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக