வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

இளங்கரையாற்றுப்படை (ஜென்ஸி)

 


இளங்கரையாற்றுப்படை

(ஜென்ஸி)

________________________________

மனிதம் 

ஓடுகிறது.ஆடுகிறது.

மூச்சு இரைக்க‌

மூச்சு வாங்குகிறது.

புல் நுனியில் புயற்கூடுகள்.

நேற்றுகள் வேண்டாம் 

எனும்

நாற்றுகள் இவை.

மின்னல்கள் கூட‌

சிந்திக்க முனையாத‌

சோம்பேறிகள் இவர்களுக்கு.

கடிகாரங்களை

உடைத்து தூளாக்குங்கள்

என கர்ஜிக்கும்

இந்த சம்மட்டிகள்

அந்த சிறகுகள் ஏன் இன்னும்

வெளிப்பட‌வில்லை என‌

புழுக்கூடுகளை

கூழாக்கும் 

பாய்ச்சல்கள் இவை.

__சொற்கீரன்__

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக