நூலாம்படைகள்
________________________________
(!)
அங்கும் இல்லை.
இங்கும் இல்லை.
எங்கும் இல்லை.
நான்.
எதற்கு இந்த
தன்மை
முன்னிலை படர்க்கைகள்?
என்னைக்காட்டிக்கொள்ள
ஏதாவது
பேசவேண்டும்
எழுத வேண்டும்
பாட வேண்டும்
நடிக்க வேண்டும்.
வழியில் ஒரு
செத்தக்குச்சியைத் தொட்டால் கூட
சுருண்டுகொள்ளும்
வளையல் பூச்சிகள்
எந்த வானவில்லை
வளைத்து முறிக்க இங்கே
காத்திருக்கின்றன.
_______________________________________
சொற்கீரன்
(2)
மனுஷ்யபுத்ரன் அவர்கள்
தன்னை
சுஜாதா என்ற
எலக்ட்ரானிக் இலக்கிய
ஆலமரமே வந்து
நீரூற்றி வார்த்தெடுத்ததை
குறிப்பிட்டிருந்தது
ஒரு வரலாற்று நெகிழ்ச்சியின்
உயிர்ச்சித்திரம்.
சொற்களை கூர் தீட்டும்
சிக்கி முக்கிக்கல் தான்
கவிதை.
எழுத்துக்களின் மாத்து பற்றி
உரைக்கும்
கட்டளைக்கல் கூட
கவிதை தான்.
கவிதை படித்தாலும்
கவிதை எழுதினாலும்
தீப்பற்றிக்கொள்ளும்
சிந்தனைத் தீற்றுகள் கூட
முகவரியற்ற மூலைகளாய்
விழியுறுத்தி நோக்கித்தான்
கிடக்கின்றன.
_____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக