இளங்கரையாற்றுப்படை
(ஜென்ஸி)......(2)
______________________________
வண்ணம் தேடி
அருகம்புல் வருடும்
பட்டாம்பூச்சிக்கு
தன் முதுகில் சுமக்கும்
வண்ணத்தோட்டம்
தெரியுமா>
கல்லூரியின் கல்வி மகரந்தங்களை
கையில் ஏந்திக்கொண்டு
கத்துக்குட்டி ஈரோக்கள் எனும்
சினிமா ஸீரோக்களிடமா பாடம் படிப்பது?
நாளைய வரலாறு உங்கள் கனவுகள்.
இந்த இருட்டுத்திரை
மத்தாப்புகளின்
ஈசல் குவியல்களா நீங்கள்?
நுண்கணிதமும் குவாண்டமும்
உங்கள் அன்றாட அண்டங்கள்.
இந்த சினிமாக்குட்டிச்சுவர்களிலா
உங்கள் சிங்கச்சிந்தனைச் சித்திரங்கள்?
விடியல்கள் என்றைக்கு
வேண்டுமானாலும்
உங்கள் உள்ளங்கையின் செம்புயல்கள் தான்.
இந்த குத்தாட்டங்களின்
"டிஸ்க் ப்ரோலாப்ஸ்களிலா"
உங்கள்
வவ்வால் மனித விளையாட்டுகள்?
ஏ ஐ களின் மூக்கணாங்கயிறுகளை
பிடிக்கவேண்டிய கைகளில்
கருப்பு டிக்கட்டுகளா?
சிந்தியுங்கள்
மின்னல் நாற்றுகளே!
அறிவின் ஊற்றுகளே!
__சொற்கீரன்__
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக