வண்ணதாசனும் "இளங்கொடி"களும்
___________________________________________
இந்த ஊரில்
அதுவும் இந்தத் தெருவில்
இனி நிகழ வாய்ப்பில்லாத அபூர்வம்.
கலப்பினம் அல்ல, நாட்டுப் பசு.
நான்காவது ஈற்றாகக் கூட இருக்கலாம்.
முகத்தைத் தூக்கிக் காற்றிலிருந்து ஊரின் திசை நுகர்ந்து நடக்கிறது.
பக்கவாட்டில் ஒரு பசித்த புத்தர் சிலை
நகர்வது போல
தோளில் தொப்புள் கொடி காயாத செவலைக் கன்றுக் குட்டியுடன் அவர்.
தை அமாவாசை இருட்டெங்கும்
நிரம்பிவழிகிறது சீம்பால் வாசனை.
நான் விழுதுமரமாக நிற்கிறேன்
உடல் முழுவதும் ' இளங்கொடி' நிரம்பிய
ஓலைப் பெட்டிகள் தொங்க.
%
2024
_____________________________________________________-
வண்ணதாசனும் "இளங்கொடி"களும்
___________________________________________
வண்ணதாசனும் "இளங்கொடி"களும்
___________________________________________
ஆம்
அந்த ஆலங்கானத்து
ஓலைப்பெட்டிகள் எல்லாம்
ஊஞ்சல் ஆடும்
அம்பாசமுத்திரத்து
தாமிரபரணிக்கரையில்
அந்த
தலையாலங்கானத்துச்
செருவென்ற பாண்டியன்
முண்டக்கண்ணும்
வெட்டரிவாளும்
கொடுவாய் மீசையுமாய்
அந்த பூடத்தோடு பூடமாய்
சொள்ள மாடனாய்
நின்று கொண்டிருந்தான்.
இந்த ஆலங்காடுகள் தானே
நம் வரலாற்றுப்புத்தகங்கள்.
புறநானூறுகள்
புழுதி கிளப்பி நின்று
நம் மீசைகளுக்கு நெய்தடவியபோதும்
ஆரியப்படை கடந்தவன்
நம் மண்ணுக்குள்
எஃகு இலைகளை பதியமிட்ட போதும்
நம் வீட்டு மாடக்குழிக்குள்
ஆரிய வாசனைதானே
சூடம் சாம்பிராணி
கொளுத்திக்கொண்டிருக்கிறது.
இந்த பாண்டிய சொள்ளை மாடன்கள்
என்றைக்காவது
அரிவாள் தூக்கியிருக்கிறார்களா
நம் வரலாறு இப்படி
அடியோடு புதைபட்டு போனதற்கு?
திடும் திடும் என்கிற இந்த
கனங்காற்றில்
அந்த ஓலைப்பெட்டிகள்
ஊஞ்சல்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன.
___________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக