நான் வாழ்ந்து காட்டப்போகிறேன்
என
ஒருவன் நடிக்கக்கிளம்பினான்.
அவன் அப்படியே இருந்தான்.
அவனது கிரீன் ரூம் மட்டுமே
வந்து
ஆடியது பாடியது
உண்ர்ச்சி கொப்பளித்தது.
நரம்புகளை முறுக்கேற்றியது.
அவன் ஜிகினாக்கள் களையப்படும் முன்
அவன் ஒன்றைத்தேடினான்.
எங்கே அது?
அது இல்லாமல் அவன்
டாய்லட் பேப்பர்கள் கூட
வசனம் பேசாதே.
எங்கே அது?
இப்போது என்ன செய்ய?
எங்கோ வேகமாய்ப்போய்
அந்த குப்பைத்தொட்டியைக்கிளறி
அள்ளிக்கொண்டு வந்தான்.
ஸ்க்ரிப்ட் பேப்பர் கூளங்கள்.
எப்போ பேசவேண்டும்
எதை பேச வேண்டும்
என்ன மொழி?
தாய் மொழியாவது
தகப்பன் மொழியாவது
பாடி லேங்குவேஜ் அது இது
என்று
இயக்குநர்
சொன்னது மட்டுமே
அரசல் புரசலாய் தெரியும்.
இப்போதைய
சினிமா எடுப்பது யார்?
இயக்குநர் யார்?
தெரியவில்லை.
உளறல் குழறல் மட்டுமே
அந்த ஸ்க்ரிப்ட்.
ஊமைகளுக்காக
ஒரு ஊமைப்படம் காட்ட வந்த
இரைச்சல்காடுகளின் மன்னன்
இப்போது அவன்!
__________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக