எப்ஸ்டீன்
_____________________________
ஒரு ஒற்றை மனிதன்
இப்படி ஆயிரக்கணக்கான
அணுகுண்டுகளை
ஒன்றாய் சேர்த்து
வெடித்திருக்கிறானே?
இது என்ன
கொடூரமான சுரண்டல்?
சுரண்டல் வெறிகளே
புளூடோனியமாய்
சுரண்டல்களின் சுரண்டலாய்
குவியல் ஆகி
மனித விழுமியங்கள் மீது
மரண மழை பொழிந்திருக்கிறது.
ஒற்றைச்சொல்லாய்
பங்கு மூலதன சூதாட்ட
வெறி
ஒரு பாலியல் வெறியோடு
கூட்டு சேர்ந்து
அரசியல் பகடைக்காய்களோடு
ஒரு நச்சு மரக்காட்டை
நமக்குள்ளே
விதை தூவி தூவியிருக்கிறது!
சமூக மனிதம்...
பொது உடமைக்கோட்பாடு..
இவையெல்லாம்
ராட்சத டைனோசார்கள்
என்று
"பிலிம் காட்டும்"
தனி மனித வெறி
இப்போது
உலகத்தின் உயிர்ப்பிடிப்பான
ஈர்ப்பு துருவங்களை
தகர்க்க முன் வந்து விட்டது.
இதனை இனம் கண்ட
அறிவின் ஓர்மை சுடரும்
விஞ்ஞானத்தையும் விழுங்கிவிடும்
செயற்கை மூளைகளின்
உருண்டு திரண்ட
உறிஞ்சல் சுரண்ட வெறி
எதையும் மூர்க்கமாய்
செய்து காட்ட
இந்த மனிதத்தின்
உட்பகையும் வெளிப்பகையும்
அரசியல் பொருளாதார
"கேம்"களின் ஏ ஐ ஸ்கிரீன் ஷாட்டுகளாய்
உலவும் வெளிகளில்
இப்போது நாம் கிடக்கின்றோம்
வெறும் டிஜிடல் குப்பைகளாய்.
____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக