அவன்
அந்த துணிச்சுருணையில்
வந்து விழுந்ததை
அவனது "குவா குவா"
பறை சாற்றியது.
அதற்குள்
ஒரு சங்கு சேகண்டி ஒலிப்பது
கேட்டால்
அதற்கு அவன் பொறுப்பல்ல.
நவீன செட் தியரி கணக்கில்
அந்த "காம்பிளிமெண்டும்"
கூடவே ஒட்டியிருக்கும்.
கோலி விளையாடி
பம்பரம் விட்டு
புத்தகங்கள் நெட்டுரு தட்டி
கம்பியூட்டர் குடலுக்குள் எல்லாமிருந்து
பூலியன் அல்ஜீப்ராவை
பிடுங்கி பிடுங்கி அந்த
நரசிம்மம் போல் மேல் எல்லாம்
பூணூல் சுற்றிக்கொண்டு
டாலர்களை அவன் மூட்டை மூட்டையாக
குவிக்கும் போது கூட
மின்சார தகனமேடை
அவன் முதுகைச்சொரிந்து
நினைவூட்டியது கூட
துலிப் மலர்க்கொத்துகள் தான்.
அது சரி.
காதல் என்று தங்கமேகக்குழம்புகள்
அவனுக்கு
அவன் ஹார்மோன்களின் முறுக்கியல்களை
ஏ ஐ சொதப்பல்களாக
ஷவர்களாய்
நீராடத்தரும்போதும்
அவன் சிதை முழுவதுமாய்
புகை மூட்டத்தில் முற்றுப்புள்ளி இடும்போதும்
அவனுக்கு எல்லாம் புரிந்தது.
அவன் ட்யூவாலிடி கேடகரியாய்
ஒரு ஹோமோடாபியில்
ஆயிரம் ஆயிரம் பிரபஞ்சங்கள்
தாண்டிய ஒரு சன்னலில்
முகம் நீட்டியிருந்தான் என்று.
______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக