சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
கல்லிடைக்குறிச்சி
தாமிரபரணி
ஆற்றங்கரையில்
நாணற்கோடுகளின்
வளைவு உச்சியில்
வெள்ளைப்பூவின்
"கொண்டை திருக்கில்"
சுடர்வீசும் கற்களின்
வீச்சு காயப்படுத்தியதில்
வலியில்லாத இன்ப ரணங்கள்!
____________________________________
பொருநைத்துறைவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக