வண்ணதாசனின் "மயில்"குட்டிகள்
_________________________________________
மயிலிறகுகள் குட்டிபோட
சரியான மகப்பேறு இல்லங்கள்
என் ரெண்டாங்கிளாஸ் புத்தகம் தான்.
பாடத்தைப் படித்ததை விட
மயில்
குட்டி போட்டுவிட்டதா என்று
புரட்டி பார்த்த தருணங்களே அதிகம்.
அறிவின் தாகம் முதன் முதலில்
அந்த "பீலி பெய்ச் சாகாடு" சுமந்த
எதிர்பார்ப்பிலும் ஆர்வத்திலுமே
இருந்தது.
எங்கள் ஊர் தாமிரபரணிக்கரையில்
சோலை சூழ்ந்த நிழல் பொதிவில்
அன்று ஒரு ஒலி கேட்டது.
அது புதிதாய் இருந்தது.
கல்லிடைக்குறிச்சியின் ஒரு
சுற்றுப்புறத்து துணிப்படலத்தை
குத்தி குத்தி துளைத்தாற்போல்
ஆனாலும் ஒரு துயரம் பிசைந்த
இனிமைப்பிழம்பில் இருந்தது அந்த ஒலி.
அப்புறம் தான்
தெரிந்து கொண்டேன்
அது மயிலின் அகவு என்று.
என் குட்டியை எங்கே என்று
என்னிடம் அகவியதோ?
____________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக