புதன், 25 பிப்ரவரி, 2026

போதும்

 



பொருனைப் புத்தகவிழா

_________________________________________


மனுஷ்ய புத்திரன்கள்

சாமராஜ்கள்

வண்ணதாசன்கள்

பாமணிகள்

என்ன பட்டியலை நீட்டிக்கொண்டு

போகிறீர்கள்

இன்னும் தொப்பில் முகமது மீரான்கள்

......

இவையும் காகிதங்கள் தான்

கரையான்களை விரட்டிவிடும்

அக்கினிக்கண்டங்கள்.

நினைவின் சிந்தனையின்

பிழம்புகளை சோழிகளாக்கி

பல்லாங்குழி விளையாடிக்

காட்டிக்கொண்டிருப்பவர்கள்.

போதும்

அந்த செவ்வாய்க்கோளின்

மண்ணை நோண்டிக்கொண்டிருந்தது..

மனிதா..

இப்படிச் சிந்தனைக்குழிகளில்

விழுந்து விழுந்து

புதுப்புது

பிரபஞ்சங்களின்

சொக்கப்பனைகளாய்

திமிறி எழுந்து வா..

இவர்களைப்போல.

_____________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக