சனி, 21 பிப்ரவரி, 2026

எத்தனை கோடி இன்பம்...?

 



எத்தனை கோடி இன்பம்...?

______________________________________


வண்ணதாசன் அவர்களே!

அந்த "இன்ஃபினிடியின்" காதை முறுக்கி

இழுத்து வந்து

வரம்புக்குள் வைத்தீர்கள்.

மகாகவி வியந்த‌

சந்து முனைக்குள்ளும்

சிந்து வாசித்து

சிந்து பூந்துறைப்படிக்கட்டுகள்

பளிங்குத்தளும்பலில்

திருநெல்வேலி அல்வா இனிப்பாய் சுருட்டி

இலைக்குள் தந்தீர்கள்.

அங்க சுத்தி இங்க சுத்தி

எங்க சுத்திப்போனாலும்

அந்த குறுக்குத்துறையின்

நெடு நெடு மருதமரம்

நம் மீது

மௌனம் தூவும்.

அந்த முருகன் கோவில் மணிஒலி

பாவும்.

அவன் கிடாக்கறி தின்னும்

குறிஞ்சிச்சித்தனா?

ஒரு வள்ளிப்பித்தனா?

திருமுருகாற்றுப்படையின்

கபாபில் செருகிய சொற்துண்டு

ஒவ்வொன்றும் 

கற்கண்டா?

நக்கீரன் சுற்றித்தந்த

சீனிச்சேவு

இனிக்க இனிக்க நீட்டித்தந்தது போல்

"எத்தனை எத்தனை கோடிகள் இன்பச்"

சவ்வுமிட்டாய்க்

கவிதை இழுத்து இழுத்துத் தந்தாய்.

கையில் கடிகாரம் சுற்றி

மயில் வைத்து

"அகவி அகவித் தந்தாய்"

இந்த ஜொள்ளு போதும்

இதற்குள்

எத்தனை எத்தனை எங்களுக்கு

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்!

________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக