கடவுளர்களே
உங்களுக்கு கிளர்ச்சியோடு
"பள்ளியெழுச்சிகள்"பாடுகின்றோமே
அதற்கு பரிசாக
ஒரு நீண்ட தூக்கத்தைத் தந்து
எங்களை அமுக்கிக்கொண்டிருப்பதன்
தத்துவம் என்ன?
உங்களைப் புரிந்து கொண்ட
எங்கள் விஞ்ஞானத்தை
நீங்கள் எடுத்து இன்னும் இன்னும்
அறிவு மிக்க "லோகங்களை"
படைக்கலாமே!
நீங்களோ
இன்னும் இன்னும் அறிவின்மையை
எங்கள் மீது தூவி
சப்ளாக்கட்டைகளை
தட்டிக்கொண்டிருக்க
விட்டு விட்டீர்களே!
------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக