நீங்கள் யாருடைய பிள்ளைகளாக
இங்கே பிறக்கப்போகிறீர்கள்?
என்னுடையவர்களாகவா?
அவனுடையவர்களாகவா?
இறைவனும் கேட்டான்.
சாத்தானும் கேட்டான்.
சரி.
ஓட்டுப்பெட்டி வைக்கலாம்
எனப்பட்டது.
ஓட்டுபெட்டி முன்னே
குவிந்தனர் கூட்டம் கூட்டமாய்.
ஓட்டுகள் குவிந்தன.
எண்ணப்பட்டன.
இருவருக்கும் சமமாய்
ஓட்டுகள்!
என்ன?
எனக்கு ஓட்டுப்போட
இன்னும் இங்கு எவரும் இல்லையா?
என்று
இருவருமே கேட்டனர்.
வெகு நேரம் ஆயிற்று.
யுகங்கள் ஆயிற்று.
கோடி கோடி காலங்கள்
வந்து வந்து
மறைந்து போயின.
அவர்கள் இருவர் மட்டுமே நின்றனர்.
அவர்கள்
கை குலுக்கிக் கொண்டனர்.
என்ன செய்யலாம்?
அவர் ஓட்டு இவருக்கும்
இவர் ஓட்டு அவருக்கும்
விழுந்தன.
அப்போது பிறந்தது தான்.
மனிதமும்
மனித அறிவும்!!
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக