இந்த ஜனநாயகத்தை
காப்பாற்ற
என்ன வழி?
நாலாபக்கமும் தீ பற்றிக்கொண்டது.
சன்னல்கம்பிகள் எல்லாம்
சிறைக்கம்பிகளாய்
பரிணாமம் அடைந்தன.
மனிதமும் சமுதாய மாண்பும்
மக்கிப்போயின.
சிந்தனையெல்லாம்
பங்குச்சந்தைகளே
முட்டிக்கொண்டு
அடைத்துக்கொண்டிருக்கின்றன.
தெய்வங்களும் புராணங்களும்
மனித ஈசல்களின் நைவேத்யத்தில்
பசியாறிக்கொண்டன.
ஓட்டுப்பெட்டிகள்
கருச்சிதைவுகளை மட்டுமே
கரு தரித்துக்கொண்டிருக்கின்றன.
நிழல்களை விழுங்கும் நிழல்கள்.
இருட்டைத்தின்று இருட்டையே
அட்டைக்கருப்பாய்
அலங்கரிக்கும் அவலச்சித்திரங்கள்...
என்ன வழி?
எங்கே வழி?
.................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக