தீ மூள்க!
________________________________
சொற்கீரன்
சிந்தனைத்தீ
மூளும் இடமே
"மூளை" எனப்படும்.
மனிதனின்
அறிவு மூலை தான்
அவன் அக்கினி மூலை.
அதை விட்டு
சோழிகுலுக்கிப்போட்டு
தேடிக்கொண்டிருக்கும்
"வாஸ்து" மூலைகளில் அல்ல
உங்கள் மூளைத்தோட்டம்.
எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகும்
என்றான் மனிதன்.
எண்ணிப்பார்த்தவன்
அறிவு கொப்பளிக்கும்
எரிமலை அளந்தான்.
அளவு எல்லைகள்
முறித்தான் தொடர்ந்தான்.
குவாண்டம் என்றவன்
"குபிட்டு"களின்
வேகம் நுழைந்தான்.
கணிப்பொறி என்றால்
கடலை மிட்டாய் வாங்கும்
காசுக்கும் கூட
அவனுக்கு "கிளிக்குகள் தான்"
மனிதன்
காற்றை சுவாசிக்க
மறந்தான்.
இப்போது அவன் சுவாசிப்பது
செயற்கை நுண்ணறிவின்
வெகு வேகத்துடிப்புகள் தான்.
சிலேட்டும் புத்தகமும் ஆக
இருந்தவன்
விண்வெளி நோக்கி
பள்ளிகள் சென்று
விண் அலை அதிர்வின்
சுவடிகள் ஊர்ந்தான்.
சூரியன் விழிக்கும்
இமைகளில் கூட
ஒட்டி நின்றான்..புதிர்
ஓவியம் ஆனான்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக