பெரியார்
மனிதனின் ஆத்மாவை
உற்று உற்று பார்த்தார்.
அறிவு வெறுமையாய் இருந்த
மனிதனிடம்
பெரிய குழி மட்டுமே இருந்தது.
அது
கடவுள் அவனுக்கு வெட்டிய சவக்குழி.
கடவுள் சவங்களைத் தான் படைத்தார்.
மனிதன் தன் நிழலை
அறிவில் தேடினான்.
ஆனால் அவனுக்கு
அவன் சவத்தையே அவனுக்குள்
ஆத்மா என புதைத்து
வைத்திருக்கிறார் கடவுள்.
தன்னை தன் மதிப்பை உணரும் வரை
அது சவமே!
போதும்.
கடவுளுக்கு
சவங்கள் தான் வேண்டும்.
"தன் மானம்" எனும்
உயிரோடு
என்றைக்கு இந்த சவங்கள் பிறக்கும்?
__சொற்கீரன்__
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக