தேர் உருட்டல்கள்?
_____________________________________
எத்தனை நாளைக்குத்தான்
இந்த அர்ஜுனன்கிருஷ்ணன்
விளையாட்டு.
உடன் பிறந்தவர்கள் தலையை வெட்டி
ஃபுட் பால் விளையாடுவதற்கு
கிருஷ்ணன்கள் வந்து
விசில் ஊதி
சுலோகங்கள் சொல்லவேண்டுமா?
மரண விளையாட்டுகளின்
ஒலிம்பிக் பந்தயங்கள்
நடத்தவா
இந்த கீதைத்தேர் உருட்டல்கள்?
கடவுள்கள்
ரத்தம் சிந்தா
பூமியை காட்டுவதற்குப்பதில்
பூமியையே
ரத்த கோளமாக்கி
குங்குமப்பொட்டு வைக்க வேண்டுமா?
மனிதனுக்குள்
வெறியை ஊதி பலூன் ஊதவா
இவர்கள்
பாஞ்சஜன்யங்கள்
ஏந்திக்கொண்டு வந்தார்கள்?
வர்ண வக்கிரங்களில்
எந்த தூய அன்பின் ஒளியை
இவர்கள்
அறுவடை செய்து காட்டுவார்கள்?
______________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக