(2)
அந்த குமிழி உடையுமுன்
உன் வானவில் சிப்பங்களை
அதில் செருக்கிக்கொள்.
கற்பனை ஒளி
கரு தரிக்குமுன்
உன் வானச் சிலேட்டை
மடியில் வைத்துக்கொள்.
குச்சி நுனியும் விரல் நுனியும்
என்ன பேசிக்கொள்கின்றன
என்பதை நீ
உற்றுக்கேட்பதிலிருந்து
உன் கனவு மண்டலங்கள்
உனக்கு குடை பிடிக்க
வருகின்றன.
______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக