கோவில் சப்பரங்கள்
ஆடி ஆடி அசைந்து வந்தன
நம் கனவுகளைப்போல.
மின்சார சொட்டு பல்புகளின்
மினுக்குகளில்
ஏதோ ஒடிக்கொண்டே தான்
இருக்கின்றன
கடவுளின் வன்மமும்
மனிதனின் வன்மமும்
போட்டி போட்டுக்கொண்டே
தெருக்களை கடந்து கொண்டே
போய்க்கொண்டிருக்கின்றன.
மூத்திர சந்துகளின்
நாற்றம் பொறுக்க முடியவில்லை.
_________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக