வியாழன், 9 மே, 2019

ரஜனியும் ரசிகர்களும்

https://tamil.filmibeat.com/news/rajinikanth-gets-slammed-on-social-media-059526.html

ரஜனியும் ரசிகர்களும்
=============================================ருத்ரா

காஞ்சிபுரம் பம்மலில் ஒரு காட்சி.
மக்களுக்காக
தண்ணீர் பந்தல் வைத்த
ரஜனி ரசிகர்கள் நற்பணி மன்றம்
ஒரு கூண்டுக்குள்
டம்ளர் உட்பட எல்லாவற்றையும்
பூட்டி வைத்து இருக்கிறது.
இது
நம் பட்சிகளின் கண்ணில் சிக்கி
காமிராவிலும் சிக்கியது.
அதை அந்த பத்திரிகையும் போட்டுவிட்டது.
இந்திய நதிகளையெல்லாம் இணைத்து
தண்ணீர்ப்பிரச்னையைத்தீர்க்க‌
இதோ பிடியுங்கள்
அன்பளிப்புத்தொகை ரூ.ஒரு கோடி
என்ற
மக்களின் அன்புத்தலைவருக்கு
இப்படியொரு
அவப்பெயர் வர விடலாமா?
பாவம்
அவர்கள் என்ன செய்வார்கள்?
சுதந்திரம் வந்து
நம் விலங்குகள் எல்லாம்
ஒடிந்து போனபின்னும்
பானைத்தண்ணீருக்கும்
அந்த டம்ளருக்கும்
பூட்டப்பட்ட விலங்கு
இன்னும் உடைய‌ வில்லையே?
பானையில் இருப்பது
தண்ணீர் அல்ல.
மனித நேர்மைக்காக‌
மனம் விட்டு அழும் நம்
சுதந்திர தாகத்தின் கண்ணீர் அது.
என்று தணியும் இந்த
கண்ணீரின் தாகம்?

========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக