தன் நெஞ்சு அறிவது...
====================================================================
ருத்ரா இ பரமசிவன்
முகம் பார்க்கும் கண்ணாடி
நம் முகப்பருவை
கிள்ளி விளையாடுகிறது.
இமைகள் துடிப்பதில்
கருவிழிகளின் சன்னிதானத்தில்
எதையோ
தேடுகிறோம்.
வெகு ட்ரிம்மாய்
போட்டுக்கொண்டிருக்கிற
சட்டை தெரிகிறது.
மன சாட்சி எங்கோ வேதாளம்போல்
தொங்கிக்கொண்டிருப்பது
தெரியவில்லை .
ஆனால்
விக்கிரமாதித்தனாய் வாளை
வெறும் காற்றில்
வீசிக்கொண்டிருக்கிறோம்.
கண்ணாடியின்
பின்னால் பூசப்பட்டிருப்பது
நம்
ஆசாபாசங்களின்
மற்றும் ஆபாசங்களின் ரசம் தான்.
அந்தப்பக்கம் ஓடிவிடுகின்ற
நம் பிம்பத்தை
நமக்கு நிறுத்திக் காட்டுகிறது.
இந்த நிழலில் தான்
நம் முகமூடிகள் எல்லாம் புதைக்கப்படுகின்றன.
எங்களையுமா
உன்னுடன் இழுத்துக்கொள்ளுகிறாய்?
மிகவும் சரி!
இதோ பிழை திருத்தம்.
பிம்பத்தில் ஒட்டியிருக்கும்
"நம்" ஐ எடுத்து விடுங்கள்.
"என்"ஐ சேர்த்து விடுங்கள்.
கிருஷ்ணன் போல் சொல்லிக்கொள்கிறேன்.
மாதங்களில் நான் மார்கழி.
மனிதர்களில் நான் இன்னொரு கிருஷ்ணன் .
==============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக