செவ்வாய், 28 மே, 2019

ரஜனி ஒரு பல்கலைக்கழகம்.

ரஜனி ஒரு பல்கலைக்கழகம்.
=============================================ருத்ரா

மக்கள் அவை தேர்தல் பற்றி
பன்முகக்கருத்துகள் கூறிய
ஒரு பல்கலைக்கழகம் ரஜனி.

மோடி வெற்றி
தனி மனித வெற்றி என்றார்.
அப்படியானால் காவியை
அவரிடமிருந்து கழித்து விட்டார்.

தமிழ் நாட்டில்
மக்கள் விரோதப்போக்குக்கு
கிடைத்த தோல்வி என்றார்.
அந்த எதிர் அலையை
அவர் ஆதரிக்கப்போகிறாரா?
எதிர்க்கப்போகிறாரா?
என்று
எந்த அடையாளமும் காட்டவில்லை.
போர் வரும்போது
பார்த்துக்கொள்ளலாம் என்றவர்
இன்னும் வேறு
ஒரு அட்டைத் "தர்பாரை"தானே
படத்தாயாரிப்பில்
அடைகாத்துக்கொண்டிருக்கிறார்.

ஸ்டாலினை அன்று பாராட்டினார்.
இன்று பாராட்டமுடியாமல்
தொண்டையில் நிற்கும்
"மோடி" விக்கல் தடுக்கிறதோ?

ஒரு தலைவராக
ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி
என்று சொல்ல ஏதோ தடுக்கிறது.
ப்ராம்ப்டர் அதாவது தமிழருவி மணியன்
காதில் ஏதாவது கிசு கிசுத்திருப்பார்.

ராகுல் காந்தியின்
அயராத உழைப்பைக்கண்டு
புல்லரித்திருப்பார் போலும்.
அவர் அதற்காக
ராஜினாமா செய்யக்கூடாது
என்று சொல்லியிருக்கிறார்.
மனிதன் என்ற படத்தில்
அன்று நடித்திருக்கலாம்.
இன்று தன் சொற்களால் காட்டிவிட்டர்
மனிதன் என்று.
அதனால் தான்
தோல்வி அடைந்த ராகுல் காந்திக்கு
புத்துணர்ச்சி ஊட்டும் சொற்கள்
தந்திருக்கிறார்.

இந்த தேர்தல் பற்றி
அவர் அறிக்கைகளில்
பல வியூகங்களை அவர் தனக்குள்
சுருட்டி வைத்திருப்பதாய் தான்
தெரிகிறது.
நண்பர் கமல் பற்றி
குறிப்பிட்டு ஏதும் சொல்லவில்லை
என்றாலும்
கமலின் அந்த பதினாலு மாத‌
கட்சி வளர்ச்சிக்கு
கணிசமான வெற்றி அது
என்று பாராட்டியுள்ளார்.


கோட்சே பற்றி
கமல் சொன்ன கருத்துக்காக‌
ஆத்மீக தலைவர் ஜீயர் அவர்கள்
கமலை வெளியே நடமாட விடமாட்டோம்
என்றார்.
பால்வளத்து மந்திரி நாவளம் இன்றி
கமலின் நாவை....றுப்போம் என்று
சொல்லாமல் சொன்னார்.
அது போகட்டும்.
மோடிஜி பதவி ஏற்புவிழாவுக்கு
கமல் ரஜனி இருவருக்கும்
அழைப்பிதழ்கள் வந்திருக்கின்றன.
வித்தை காட்டும் உடுக்கைகள் ஒலிக்கின்றன.
எதற்குள் எது?
அரசியலுக்குள் சினிமாவா?
சினிமாவுக்குள் அரசியலா?

===============================================

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

லோக் சபா தேர்தலில் ஸ்டாலின் திறமையால் தான் வென்று இருந்தால்
சடடசபை இடைத்தேர்தலில் ஸ்டாலின் வென்று எடப்பாடி அரசை கலைத்து முதல்வராகி இருந்திருக்க வேண்டும்
ஆனால்
அப்படி நடக்கவில்லை
மோடி எதிர்ப்புதான் ஸ்டாலின் வெல்ல காரணம்

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

Let Rajani take this opportunity.

கருத்துரையிடுக