ஞாயிறு, 5 மே, 2019

கடவுள் எங்கே? இதோ இங்கே! (2)


General Relativity Confirmed Near Black Hole
நன்றி :கூகிள் இமேஜஸ்

https://www.google.co.in/search?hl=en&authuser=0&tbm=isch&source=hp&biw=682&bih=336&ei=zXnOXPKfFZ3Tz7sPmaeJkAI&q=GENERAL+RELATIVITY&oq=GENERAL+RELATIVITY&gs_l=img.3..0l10.8967.16610..17575...0.0..0.189.2676.0j18......1....1..gws-wiz-img.....0.cUFHwPGxP_k#imgrc=G2YBRf7qSKatbM:



கடவுள் எங்கே? இதோ இங்கே! (2)
============================================ருத்ரா

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
முதலில் சிந்தனையாளன்.
அப்புறம் தான் அவர் விஞ்ஞானி.
முதல் நிலை படிப்பை முடித்து
விஞ்ஞானப்படிப்புக்கு
நுழையும் முன்
ஒரு கிளார்க்காகத்தான்
பணியாற்றினார் அந்த மாமேதை.
நாம் கண்ட சிந்தனையாளர்கள்
சொற்களைக்கொண்டு
தன் கற்பனை மற்றும் கொஞ்சம்
அறிவு உணர்வு
எனும் உளி கொண்டு
சமுதாயச்சிற்பத்தைச் செதுக்குவார்கள்.
இவரோ
தான் அறிந்த இயற்பியல்
மற்றும் கணிதம் கொண்டு
இந்த விண்வெளி எனும் பிரபஞ்சத்தை
சிந்தித்தார்.
அவருக்கு அந்த பொறி தட்டியது
உண்மையிலேயே
விஞ்ஞானிகளின் இருண்டகுகைக்குள்
ஒரு "பெரிய வெளிச்சத்தை"
திறந்து வைத்தது.
அதாவது ஒளியின் வேகமே
(விநாடிக்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் மைல்கள்)
இந்த பிரபஞ்சத்தின் பெரிய வேகம் ஆகும்.
அதற்கு மீறிய வேகம் எதுவும் இல்லை.
பிண்டம் எனும் ஒரு பொருள்திணிவு
இந்த வேகத்தை எட்டும்போது
எல்லாமே ஆற்றல் ஆகி விடுகிறது.
அல்லது அந்த பேராற்றல் தன் வேகத்தை
இழந்து நிற்கும்போது
அந்த மாஸ் "ரெஸ்ட் மாஸ்"
அதாவது ஒய்வு நிறை ஆகிறது.
பிண்டமும் (ஆற்றல்)வேகமும்
இப்படி சார்ந்து இருப்பதை
சிறப்பு சார்பு என்று
அவர் தன் சிந்தனைவடிவத்தில்
கணிதமும் இயற்பியலும் பிசைந்து எழுதிய
ஸ்பெஷல் ரிலேடிவிடி என்ற‌
கட்டுரையை வெளியிட்ட போது
விஞ்ஞான உலகமே மொத்தமாய்
ஒரு மூக்கும் விரலும் ஆகி
வியந்து போய்
மூக்கின் மேல் விரலை வைத்தது
உலகத்தின் எட்டாவது அதிசயம்.
தாட் எக்ஸ்பெரிமென்ட்
எனும் சிந்தனைச்சோதனை மூலம்
இந்த உலகத்தின் அறிவுக்கண்களை
திறந்து வைத்தார்.
மேலோகம் என்றால்
சொர்க்கம் என்று பெயர்.
அதில் இந்திரன் இந்திராணிகள்
கடவுள் அம்சங்களாய்
மேக மண்டலங்களில் உலா வருவார்கள்
என்று
நம்பிக்கொண்டிருக்கும் நமக்கு
ஈர்ப்பு விசையை
விண்வெளியின் விஞ்ஞானம்
என்று சொல்வது கூட‌
"தேவ தூஷணம்"
அந்தக்காலத்தில் அதற்கு
சிரச்சேதமே தண்டனை.
அதே "அந்தக்காலத்தை"
இப்போது நம் மீது பதியம் இட‌
சில அரசியல்காரர்கள்
கோடரிகளையும் கதாயுதங்களையும்
தூக்கிக்கொண்டு அலைகிறார்களே
அதை முறியடிக்க‌
அவர்கள் கடவுளை
அக்கு வேறு ஆணி வேறு பிரித்து
விஞ்ஞான எண்ணெயில்
ஊறப்போட்டுத்தான் ஆகவேண்டும்.

ஐன்ஸ்டீன்
அதே சிந்தனையின் உளி கொண்டு
கிரேவிடேஷனல் ஃபீல்டு எனும்
ஈர்ப்புப்புலத்தை
நமக்கு பரப்பி விரித்துக்காட்டினார்.
அது பொது சார்புக்கோட்பாடு
(ஜெனரல் ரிலேடிவிடி) என்று
உலகம் முழுதும்
விஞ்ஞானிகளின் அறிவு விருந்து ஆயிற்று.
அவரது "பொதுசார்பு சமன்பாட்டின் தீர்வு"
இந்த பிரபஞ்சத்தின் திறவு கோல் ஆகும்.
ஆம்
அங்கே தான் "கருந்துளை"
ஆவென்று வாய்பிளந்து
அருகே வருவதையெல்லாம் விழுங்கிவிடுகிறது.
(மேலே உள்ள படம் அது தான்)
ஒளிக்கதிர் கூட உறிஞ்சப்பட்டு விடுகிறது.
ஒரு விண்மீன் சூரியனைவிட
மூன்று மடங்கு நிறை அதிகமாகும்போது
அது தன் ஈர்ப்பின் ஆரத்தை
பலப்பல கோடிக்கணக்கான மைல்களிலிருந்து
மூன்று கிலோ மீட்டராக சுருக்குகிறது.
அதாவது ஈர்ப்பின் நிறை
தூரத்தை தன்  கைக்குள்
கசக்கிப்பிழிந்து விடுகிறது.
அந்த அளவுக்கு நிறையும் ஈர்ப்பு ஆற்றலும்
அதிகரிக்கிறது.
மொத்த பிரபஞ்சத்தையும்
ஒரு புள்ளியில் அடக்க ஆவேசம் கொள்கிறது.
அந்த புள்ளியில் இருப்பது பூஜ்ய பிரபஞ்சம்.
இதன் கணித மொழியே
ஒருமியம் எனும் "சிங்குலாரிட்டி"

இதற்குள் நீங்கள்
ஆயிரம் கிருஷ்ணர்களின் விசுவரூபத்தை
சுருட்டிவைத்துக்கொண்டு
சஹஸ்ரநாமம் பாடுங்களேன்
யார் வேண்டாம் என்றது?
இதை விட்டு
அடித்தட்டு மக்களிடம்
எதற்கு இந்த பூச்சாண்டித்தனங்கள்?


(தொடரும்)

======================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக