திங்கள், 6 மே, 2019

ஆயிரம் முத்தங்கள்

ஆயிரம் முத்தங்கள்
=====================================செந்நிலா.

ஆயிரம் முத்தங்கள்
கொடுத்திருப்பாய்.
 அந்த தேன்மழை
அத்தனையும் வெறும் எச்சில் தான்
என் அடிவயிற்று லாவா
ஒரு வலியைப் பிசைந்து
நெருப்பைக் கடைந்து
ஒரு ரோஜாவாய்
என் குழந்தையின் பட்டுக்கன்னத்தை
என் உதடுகளின் உரசலுக்கு
தந்த பின்னே!

===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக