சனி, 11 மே, 2019

தோப்பில் முகமது மீரான்.




https://tamil.asianetnews.com/tamilnadu/writer-thoppil-mohammed-meeran-dead-pr9t0g 
இந்த சுட்டிக்கு நன்றி! 

தோப்பில் முகமது மீரான்.
============================================ருத்ரா

திருநெல்வேலி பேட்டை
வீரபாகு நகரில்
தமிழ் எழுத்துக்களின்
குவியல்
முத்துக்களாய் மணிகளாய்
சுடர்ந்து கொண்டிருந்த
ஒரு யுகம் ஓய்வு கொண்டு விட்டது.
அவரது சிறுகதை தொகுதியில்
சமுதாயம்
அவலங்களால்
அழுகிக்கொண்டே
அழுதுக்கொண்டே
இருந்த போதும்
ஒரு எரிமலையின்
அழகிய  சிலிர்ப்பை சிரிப்பை
புஷ்பித்துக்காட்டியது.
அதில் ஒரு  காதல் கதை
படித்தவர்களின்
நெஞ்சை ரகசியமாய் கிள்ளும்.
அந்த காதலி
அவர் எழுதிய பக்கங்களில்
எந்த
இடத்திலும்
க்ளுக் என்று சிரிப்பொலி கூட
எழுப்பியிருக்க மாட்டாள்.
முகத்தையோ
கண்களையே கொண்டு
அந்த "பொன் தூண்டிலைக்கூட "
வீசியிருக்க மாட்டாள்.
ஆனால்
பின்தொடரும் இவன்
துடிக்கும் மீன் ஆகியிருப்பான்.
அந்த பஸ்ஸில்
அவன் அவள் கூந்தலை
பின்னிருந்து தான்
பார்க்கிறான்.
கூந்தலின் கீற்றுகள்
அந்த மண்ணின்  மணம் மிக்க
ஒரு தைலத்தில்
மின்னும் ஒளியுடன்
அவன் மீது  சுளீர் சுளீர் என்று
சாட்டை சொடுக்கியது.
அவன் இதயம் இன்பவலியின்
பொன்னுலகம் ஆனது.
அவர்கள் காதல்
நிறைவேறுவது அல்லது
நிறைவேறாமல் போவது பற்றி
அந்த பக்கங்கள் மூச்சு
காட்டவில்லை.
வரிகள் எல்லாம் வழுக்கிக்கொண்டு
ஓடிவிட்டன.
ஈரமே காட்டாத கண்ணீர்த்திவலைகள்
அந்த  எழுத்துக்கள் தோறும்
கிளர்ச்சி ஊட்டின.
அற்புதமான எழுத்துக்கள்.
"அனந்த சயனம்   காலனி "
எனும் அந்த கதைகளின் தொகுப்பு
எழுத்து மின்னல்களின் "கோகூன்"கள்
ஊஞ்சல் ஆடுகின்ற
படைப்பு த்தோட்டம்.
அந்த புத்தகம் படித்தால்
அவர் இறந்து விட்டது
மறந்து போய்விடும்.
அவர் பிறந்து பிறந்து வந்து
அந்த எழுத்துக்களில்
அவர் உலவுவதாய் உணர்கின்றோம்!

==========================================================







.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக