தூரம் தொலைவு அல்ல
==============================================================
ருத்ரா
நம் லட்சியம்
வெகு அருகில் தான் ..
அதுவும் கூட
நம் கைகளில் தான் இருக்கிறது.
தொலைவில் இருக்கிறது
என்று சொல்லி
அதை "தொலைத்து"விடலாமா?
வெற்றியை நாம்
எப்போதோ எழுதிவிட்டோம் .
எழுத்துக்கூட்டி
வாசிக்க வேண்டும் அதை.
அதைத்தான்
நாம் நம் நெஞ்சின் தகிப்பில்
அடுப்பு மூட்டி
அழல் வீசவேண்டும்.
ஏனெனில்
தமிழ் தமில் ஆகி
நம் நாக்கின் நுனிக்கு வந்து விட்டதே!
அயல் மொழிகளின்
தந்திரத்தில்
அவற்றின் ஆதிக்கபோரில்
தமிழ் விழுந்து விடும்
தருணத்துக்கு வந்து விட்டதோ
என்ற ஐயமே
இங்கு புகை மூட்டமாய்
இது வரை மூடிக்கிடந்தது.
இன்று
வடவர்களும்
தமிழை எழுத்துக்கூட்டி வாசித்தே
நம் வாய்ப்புகளைப் பறித்துக்கொள்ளுகிறார்களாமே.
மக்கள் அவைக்கு இப்போது
நம் வெற்றியை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறோம்.
நம் வெற்றியை இனி
அவர்கள்
எழுத்துக்கூட்டி வாசித்துக்கொள்ளட்டும்.
அதில் அவர்கள் புரிந்த கொள்ளப்போகும்
வரிகள் இதுவே.
தமிழ் வெல்லும்!
தமிழ் வென்றே தீரும்!
==================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக