அட்சய திரிதியை
=======================================ருத்ரா
முட்டாள் தனமும்
மூடத்தனமும்
கிலோக்கணக்கில்
டன் கணக்கில்
விற்பனையாகும் நாள்.
செய்கூலி சேதாரம்
இவையே அதிகம் உச்சரிக்கப்படும்
வார்த்தைகள்.
கடவுளைக்கூட
ஹிரண்ய கர்ப்பன்
அதாவது பொன்னில் பிறந்தவன்
என்று
கூட்டம் கூட்டமாக
வெறி சேர்க்கும் தேசம் இது.
வறுமைக்கோடும்
இந்த பேராசையின்
தொப்பூள் கொடியில்
தொங்கிக்கொண்டிருப்பதை
பார்க்கலாம்.
எடை பார்க்கும் அந்த
மின்னணுத்தட்டில்
ஒரு கிராம் எடைக்கு
பசும்பொன்னாக
அப்போது தான் பிறந்த
பெண்குழந்தைகூட
சமம் ஆவதில்லை.
அந்த "ஒரு கிராம்" தட்டு
தாழ்ந்தே இருக்கும்.
ஆண்குழந்தை வீட்டுக்கு
ஒரு ஆதாரம் .
பெண்குழந்தையோ அங்கு
ஒரு சேதாரம்.
இதற்கு காரணம்
மட சம்பிரதாயங்கள் தான்.
எப்போது இந்த மண்ணிலிருந்து
சேதாரங்களான
மதமும் கடவுளும்
குப்பையில் வீசப்படுமோ
அப்போது தான்
மனித சக்தி எனும் ஆதாரம்
இந்த மண்ணைக்காத்து
ஆட்சி செய்யும்.
செவ்வாய்க்கும் சனிக்கும்
இவர்கள்
எத்தனை விண்கோள்கள்
அனுப்பினாலும்
அவையாவும் வெறும்
கிலு கிலுப்பைகளே.
=============================================
=======================================ருத்ரா
முட்டாள் தனமும்
மூடத்தனமும்
கிலோக்கணக்கில்
டன் கணக்கில்
விற்பனையாகும் நாள்.
செய்கூலி சேதாரம்
இவையே அதிகம் உச்சரிக்கப்படும்
வார்த்தைகள்.
கடவுளைக்கூட
ஹிரண்ய கர்ப்பன்
அதாவது பொன்னில் பிறந்தவன்
என்று
கூட்டம் கூட்டமாக
வெறி சேர்க்கும் தேசம் இது.
வறுமைக்கோடும்
இந்த பேராசையின்
தொப்பூள் கொடியில்
தொங்கிக்கொண்டிருப்பதை
பார்க்கலாம்.
எடை பார்க்கும் அந்த
மின்னணுத்தட்டில்
ஒரு கிராம் எடைக்கு
பசும்பொன்னாக
அப்போது தான் பிறந்த
பெண்குழந்தைகூட
சமம் ஆவதில்லை.
அந்த "ஒரு கிராம்" தட்டு
தாழ்ந்தே இருக்கும்.
ஆண்குழந்தை வீட்டுக்கு
ஒரு ஆதாரம் .
பெண்குழந்தையோ அங்கு
ஒரு சேதாரம்.
இதற்கு காரணம்
மட சம்பிரதாயங்கள் தான்.
எப்போது இந்த மண்ணிலிருந்து
சேதாரங்களான
மதமும் கடவுளும்
குப்பையில் வீசப்படுமோ
அப்போது தான்
மனித சக்தி எனும் ஆதாரம்
இந்த மண்ணைக்காத்து
ஆட்சி செய்யும்.
செவ்வாய்க்கும் சனிக்கும்
இவர்கள்
எத்தனை விண்கோள்கள்
அனுப்பினாலும்
அவையாவும் வெறும்
கிலு கிலுப்பைகளே.
=============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக