ஞாயிறு, 26 மே, 2019

சிந்தனையே ஆய்வு (தாட் எக்ஸ்பெரிமென்ட்)

சிந்தனையே ஆய்வு  (தாட் எக்ஸ்பெரிமென்ட்)
=============================================================ருத்ரா

         நா என்பது நாவை குறிப்பது.நாவின் அசைவே மொழி ஆயிற்று.ஆனால் ஒலியைக்காண முடியாது.அது கண் பார்வைக்கு தோற்றம் தருவது அல்லது எழுவது என்பது வடிவப்படுத்தலே ஆகும்.எனவே ஒலி வடிவம் வரி வடிவம்
ஆகும்போது எழுத்து ஆனது.அதன் பிறகு தான் பொருந்தி உள் நிற்பது (பொருள்) எல்லோருக்கும் புலப்பட்டது.நம் இலக்கணத்தில் எழுவாய் ("சப்ஜெக்ட்)தோன்றுவதற்கு அடிப்படை இந்த வடிவத்தோற்றமே.("எழு தரு ஞாயிறு கடற்கண்டாங்கு).மொழி முதலில் நாவின் அசைவிலிருந்து வடிவத்தோற்றமாய் "எழு"வதாலேயே எழுத்து ஆயிற்று.வாய் மொழி "செய்"மொழி ஆனது."செய்யுள்" மொழியே எழுத்து மொழி.ஆக்கை என்றால் ஆக்குதல் என்று பொருள்.ஆனை... யானை ..ஆடு ..யாடு...என்பது போல் ஆக்கை யாக்கை ஆயிற்று.எனவே யாப்பு இலக்கணமே எழுதும் முறைகளின் இலக்கணம் ஆயிற்று.கை கரம் போன்றவை தமிழ்ச்சொல் ஆகும்.இவற்றின் செயல் தான் காரியம் ஆயிற்று.காரிகை என்று வடசொல் போல தோன்றுவது வடதமிழ் தான்.(கவுட பாத காரிகை).ஓதம் ஓதை என்பது ஒலித்தல் ஆகும்.எனவே முதல் தமிழர்கள் ஓதி உணர்த்துவதே கல்வி ஆயிற்று.வேய் என்றால் புல் முதல் தமிழர்கள் உலர்ந்த புல்லில் தீ மூட்டி வட்டமாய் அமர்ந்து "ஓதி உணர்ந்து உணர்த்திக்கொண்டதே" (வேய் +ஓதம்) வேய்தம்..வேதம் ஆனது.சிந்து வெளித்தமிழர்கள் திரைகடலோடி திரைவியர்கள் ஆகி உலக மொழிகளின் கலவையை தமிழ்ப்படுத்தினார்கள்.மெய்யெழுத்துக்களை நான்கு வடிவங்களில் குறிப்படுத்தியதே சமஸ்கிருதம் ஆகியது."ஓதல் ஆதன் தந்தை தான் "ஓதலாந்தையார்" ஆனது.இந்த வடதமிழ் முதல் தமிழான தென்தமிழோடு இயைவு பெறாமல் இருந்ததே மொழி வழி இன வழியாக பிரியக்காரணம் ஆயிற்று.இன்று வரை தமிழ் மட்டுமே நான்கு வடிவ மெய்யெழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் புழங்கி வருகிறது.மறைமொழியாய் (வடதமிழ்)மக்கள் புழக்கத்திலிருந்து மறைவு பட்டதாலேயே அது மறை மொழியாயிற்று."நிறைமொழியாக மாந்தர் மொழியாக இருந்தது தொல் தமிழே.நெடி குறிலுக்கு மாத்திரை தந்தவர் தொல்காப்பியர்.இவரது மாணாக்கரான பாடினி(பாணினி...பாணன் தான் ..பாடுநன்) அந்த மெய்யெழுத்துக்கு மெல்லின வல்லின ஒலிப்புகளுக்கு
மாத்திரை தந்து வேறு படுத்தினார்.இவர் அவருக்கு மாணாக்கரா அவர் இவருக்கு மாணாக்கரா என்பது வடதமிழ் தென் தமிழ்ப் பாகுபாடு தான்.வடதமிழ்ப் பெயர்கள் தென் தமிழ்ப்பெயர்களோடு நிரவி நின்றதற்கு காரணம் இரண்டும் ஒரே தொல் தமிழ் வேர்ச்சொற்களை கொண்டிருப்பதே காரணம். இருப்பினும் சமஸ்கிருதத்தில் திரைவிய‌த்தமிழன் கொணர்ந்த எகிப்திய கிரேக்க லத்தீன் மற்றும் சுமேரிய பாரசீக பாபிலோனிய ஒலிப்புகளே அதிகம் இருப்பதால் அது அயல் மொழி போல் தோற்றுகிறது.
இது எனது பேராசை அல்ல. ஆதாரங்கள் தோண்டப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.ஐன்ஸ்ட்டின் இயற்பியலில் கண்டுபிடித்தது போன்ற சிந்தனைச்சோதனை (தாட் எக்ஸ்பெரிமென்ட்)யே ஆகும் இது.

============================================================ருத்ரா
27.02.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக