https://www.google.com/search?q=dirac%27s+equation&tbm=isch&source=iu&ictx=1&fir=Fvqr5B_CpdYGCM%253A%252C24FfHSlIz4hjXM%252C%252Fm%252F09t7j&vet=1&usg=AI4_-kTh4puKi0TvOG-okuSVS2wd2xztgQ&sa=X&ved=2ahUKEwiL0JXJqoHiAhWUT30KHVBfA90Q9QEwAHoECA4QBg#imgrc=Ffh8DX6s3rvI4M:&vet=1
கடவுள் எங்கே?...இதோ இங்கே!
==================================================ருத்ரா
கடவுள் எங்கே?
இந்த கேள்வியின் குரல்
ஓயவே இல்லை.
நாத்திகம்
கடவுள் இல்லை என்று
பாயைச்சுருட்டி
ஒரு மூலையில் வைத்துவிட்ட போதும்
ஆத்திகத்தின்
ஆர்ப்பாட்டமான தாரை தப்பட்டைகள்
இன்னும்
இரைச்சல்கள் இட்டுக்கொண்டு தான்
இருக்கின்றன.
கடவுளுக்கு கூட
அந்த சுருட்டிவைக்கப்பட்ட
பாயில் தான் கண்.
கடவுள்
அழகு என்றால்
மேலே கண்ட சமன்பாடு
விஞ்ஞானிகளால்
கொள்ளை அழகு என்று
போற்றப்படுகிறதே
அந்த அழகைத்தான்
கடவுளே
ரசித்துக்கொண்டிருக்கிறார்
போலும்.
அந்த அழகைப்பற்றிய
ஒரு "சவுந்தர்ய லஹரி " என்னவென்று
பார்ப்போமே.
ஆற்றல் இங்கே
துகளா? அலையா?.
அசையாது இருக்கும்
துகளின் இடமும்
அசையும் துகளின்
அசைவு தடமும்
அளந்து பார்த்தல் அரிது.
அந்த "அளபடையே" இங்கு
குவாண்டம் என்னும் கடவுள்?
இங்கே கொச்சை படுத்தப்படுவது
கடவுளா?
குவாண்டமா?
இதை பகுத்து அறிவதே
நாத்திகம் என்போம்.
அதனால் தற்போதைக்கு
கடவுளை
அந்த பாயில் சுருட்டி
ஒரு மூலையில் வைப்போம்.
ஆயிரம் வகையாய்
தியானம் செய்தும்
கடவுள் நம் சமன்பாட்டுக்குள்
வருவது இல்லை.
கடவுள் என்றால் நான்கு வர்ணம்.
கடவுள் என்றால் பாவ புண்ணியம்
கடவுள் என்றால் பிராமண த்தத்துவம்
கடவுள் என்றால்
கடவுளின்மையும் ஆகும் என்று
பாஷ்யங்கள்
அடுக்கி அடுக்கிக் குவிக்கின்றார்.
கடவுளே இங்கு தவிக்கின்றார்.
அவருடைய பரம்பொருளில்
அவருடைய பரம்பொருளை
மேக்ஸ் பிளாங்க் என்பவர்
சூத்திரப்படுத்தினார்.
அந்த "சூத்திரர் அல்லது மிலேச்சருக்கு"
மட்டும்
"பிளாங்க் கான்ஸ்டன்ட்" எனும்
ஒரு தரிசனம் கிடைத்தது.
கடவுளும் கூட அதையே தன்
கடவுள் என்று தரிசித்தார்.
(தொடரும்)
==================================================================
2 கருத்துகள்:
வாவ்
நன்றி திரு கஸ்தூரிரெங்கன் அவர்களே!
கருத்துரையிடுக