புதன், 8 மே, 2019

புதிய வார்ப்புகள்

புதிய வார்ப்புகள்
============================================ருத்ரா

காதல் பற்றி
டன் கணக்கில்
சொற்கள் குவிந்து
கிடக்கின்றன.
கண்ணே வா.
ஒரு சொல்
தேர்ந்தெடுக்கலாம்.
இவனுக்கு
"அம்மா" என்ற சொல்
கிடைத்தது.
அவளுக்கு
"அப்பா" கிடைத்தது.
இந்த சொற்களை
வைத்துக்கொண்டு
என்ன செய்வது?
அப்பா அம்மாவுக்கு
தெரியாமல் வருங்காலத்தில்
ஒரு அம்மா அப்பா விளையாட்டு
எப்படி விளையாடலாம்
என்று தானே
அந்த மெரீனா கடற்கரையின்
பொன் மணற்குவியலில்
தங்கள் மனக்குவியல்களை
கொட்டிக்கவிழ்த்து
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
விளையாட வந்திருக்கிறார்கள்.
இங்கே கிடைத்த சொற்கள்
காதல் எனும்
விளையாட்டுக்குள்
ஒளிந்திருந்த‌
வாழ்க்கையை
காட்டி விட்டது.
ஒரு முடிவுடன்
இருவரும் எழுந்து கொண்டார்கள்.
செல்போன்களை வைத்து
பேசி பேசி
நம் காதலை
செதுக்குவதை விட‌
நம் அம்மா அப்பாக்களிடம்
உன்னைப்பற்றி நானும்
என்னைப்பற்றி நீயும்
தினம் தினம் பேசி
நம் காதலை
வளர்த்து செழிக்க வைத்து
ஜெயிக்க வைக்கலாம்
என்று
கிடைத்த சொற்களைப்
பிடித்துக்கொண்டார்கள்!

இவர்கள் கூட காதலின்
புதிய வார்ப்புகள் தான்.

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக