ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

"பால்வழி"ப்பறவையின் முட்டைகள் (MILKY WAY LAYS EGGS)

 

"பால்வழி"ப்பறவையின் முட்டைகள்

__________________________________________________‍


விண் வெளி தொலைநோக்கி விஞ்ஞானிகள் திகில் கலந்த வியப்புமிக்க காட்சிகளை கண்டு பிடித்திருக்கிறார்கள்.மில்கி வே எனும் நம் "விண்ணொளிப் பெருமண்டலம்" (காலக்சி).2020 களில் கண்ட ஆய்வின் காட்சிகள் இவை.2010லும் இது போல் கண்டிருக்கிறார்கள்.ஏறக்குறைய ஒரு லட்சம் ஒளியாண்டுகள் தூரம் விட்டமாக உள்ள நம் பால்வழி மண்டலத்தின் "தட்டை" வடிவத்தில் 50 000 ஒளியாண்டுகள் விட்டத்தில் 

இரண்டு இராட்சச குமிழிகளை அல்லது முட்டைகளை(மேலே ஒன்று கீழே ஒன்று) கண்டு பிடித்திருக்கிறார்கள்.

2010லும் இதே போன்று பார்த்திருக்கிறார்கள்.ஏற்கனவே நம் பால்வழி மண்டலத்தின் கருமையமே பெருங்கருந்துளை என்ற ஒரு கருத்து உள்ளது.அதன் அளப்பறிய ஆற்றலின் வீச்சு ஒளி (ஜெட்) மற்றும் எல்லையாற்ற ஆற்றலின் பெருவெள்ள ஒளி அங்கே இப்படி திரண்டு இரு குமிழிகளாய் இருக்கலாம் என கருகிறார்கள்.இது பால்வழியின் ஒரு "பிரசவம்"போன்ற நிகழ்வாக இருக்கலாம் என்கிறார்கள்.இன்னொரு காலக்ஸியுடன் மோதல் நிகழ்வாக க்கூட இருக்கலாம்.ஜெட் போன்று மேலும் கீழும் வீச்சு அடைவதற்குப்பதில்

அந்த கருந்துளை இந்த ராட்சசக்குமிழிகளை மேலும் கீழும் ஊதி விளையாடும் நிகழ்வு கூட அங்கே அரங்கேறியிருக்கலாம். கீழே உள்ள சுட்டியை(லிங்க்) தட்டிப்பாருங்கள்."சோப்புக்குமிழி" விளையாட்டின் அந்த‌

சிறுவனே (பால் வழி) நம் பிரபஞ்சப்பிதாமகன்........இ பரமசிவன்








Two Bizarre Bubbles Sandwich The Milky Way Galaxy. Here's What They Could Be

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக